Don't Miss!
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- News தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு 69.46%.. தருமபுரியில் தான் அதிகம்.. மத்திய சென்னையில் மோசம்! முழு தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஏப்ரல் 1 முதல் வைபவ்-ஓவியாவின் 'ஹலோ நான் பேய் பேசுறேன்'
சென்னை: வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும், ஹலோ நான் பேய் பேசுறேன் திரைப்படம் ஏப்ரல் 1 ம் தேதி வெளியாகிறது.
சித்தார்த் விபின் இசையமைப்பில் அறிமுக இயக்குநர் பாஸ்கர் இயக்கியிருக்கும் படம் ஹலோ நான் பேய் பேசுறேன்.
இதில் வைபவ், ஓவியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிங்கம்புலி, கருணாகரன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். அரண்மனை, அரண்மனை 2 என்று அடுத்தடுத்து 2 பேய்ப்படங்களை கொடுத்த சுந்தர்.சி இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
The super exotic horror film of next month!#HNPP Releasing April 1 @actor_vaibhav @aishu_dil @sidvipin pic.twitter.com/U4mPuC0nW5
— Sri Thenandal Films (@ThenandalFilms) March 20, 2016
ஒரு செல்போனில் இருந்து பேய் வருவது போல இப்படத்தை வித்தியாசமாக பாஸ்கர் இயக்கியிருக்கிறார்.இந்நிலையில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது.
அதன்படி வருகின்ற ஏப்ரல் 1 ம் தேதி ஹலோ நான் பேய் பேசுறேன் படம் உலகெங்கும் வெளியாகவுள்ளது.
செல்போன் பேய் மிரட்டுமா? பார்க்கலாம்.