Hema Committee: தமிழ் சினிமா உலகில் இவரு மட்டுமே 100 சதவீதம் யோக்கியன் - விசித்ரா பளீச்
கொச்சி: இந்தியா முழுவதும் உள்ள ஒட்டுமொத்த திரையுலகமும் மிகவும் கூர்மையாக கவனித்து வரும் விஷயங்களில் ஒன்றாக இருப்பது, மலையாள சினிமா உலகை உலுக்கி வரும் ஹேமா கமிட்டி விவகாரம்தான். நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், அது தொடர்பாக கேரள மாநில அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியை உருவாக்கியது. கடந்த 2017ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கமிட்டி, அளித்த அறிக்கை பல திடுக்கிடும் உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. இது மலையாள சினிமாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் நடிகர் நிவின் பாலி மீதும் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். ஆனால், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் நிவின் பாலி கொச்சியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தார் என விடுதி நிர்வாகமே தெரிவித்துள்ளது. இதனால், நடிகர்கள் மீது வேண்டுமென்றே சிலர் பொய்ப் புகார்களைக் கூறுகின்றனர் என்ற பேச்சும் இதனால் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், பல நடிகைகள் தங்களுக்கு நடைபெற்ற, தாங்கள் எதிர்கொண்ட பாலியல் சீண்டல்கள் குறித்தும் பாலியல் வன்கொடுமைகள் குறித்தும் வெளியில் சொல்லி வருகின்றனர். நடிகை சசிகலா மலையாள சினிமாவில் அதிகப்படியான பாலியல் தொல்லை இருப்பதால்தான் தமிழ் சினிமாவில் அதிகம் நடித்தேன் எனவும் அதற்காக தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ள மாட்டேன் எனவும் கூறினார்.

விசித்ரா: இதேபோல் நடிகர் சரத்குமார் இது குறித்து பேசுகையில், கேரளாவில் ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையின் கீழ் குழு அமைகப்பட்டதைப் போல், தமிழ் மட்டும் இல்லாமல் அனைத்து மொழிகளிலும் விசாரணைக் குழு அமைக்கவேண்டும் எனக் கூறினார். இப்படியான நிலையில் நடிகையும் பிக்பாஸ் சீசன் 7இல் கலந்து கொண்டு இறுதி வரை சக போட்டியாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்தது மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பார்க்கும் நிகழ்ச்சியில், தனக்கு நடைபெற்ற, தான் எதிர் கொண்ட பாலியல் சீண்டல் குறித்தும், அதிலிருந்து தன்னை தனது கணவர் எப்படி காப்பாற்றினார் என்றும் கூறினார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரஜினிகாந்த்: இது மட்டும் இல்லாமல், சமீபத்தில் வெளியான ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி நடத்திய விசாரணை அறிக்கை குறித்தும் ஊடகங்களில் பேசி வருகின்றார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து மிகவும் காட்டமான விமர்சனத்தை முன் வைத்தார். குறிப்பாக, " ஹேமா கமிட்டி பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கேளுங்கள். ரஜினியிடம் சென்று கேட்கிறார்கள். ஆனால் அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோரிடம் சென்று கேட்க வேண்டும். ரஜினிகாந்த் இப்போது தனது படம் நல்லபடியாக ரிலீஸ் ஆக வேண்டுமே என்ற டென்ஷனில் இருக்கிறார்" எனக் கூறியிருந்தார்.

யோக்கியன்: அதேபோல் பேட்டி ஒன்றில், எனக்குத் தெரிந்து சினிமா உலகில் 100 சதவீதம் யோக்கியர் என்றால் அது நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்திரன் சாரைச் சொல்லுவேன் எனக் கூறினார். டி. ராஜேந்திரன் தான் இயக்கிய படங்களிலும் சரி நடித்த படங்களிலும் சரி நடிகைகளைத் தொட்டதே இல்லை. இதனை ஒரு கொள்கை முடிவாகவே கொண்டவர். அதேபோல் நடிகர் சிவக்குமார் தான் நடித்த நடிகைகளுடன் முத்தக் காட்சியில் நடித்ததே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











