Dharmendra: என் கணவர் குணமாகிட்டு வராரு.. மீடியாக்கள் அவசரத்தை மன்னிக்கவே மாட்டேன்.. ஹேமா மாலினி காட்டம்!

மும்பை: மூத்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நலம் தொடர்பாக பரவி வரும் வதந்திகளுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை நடிகை ஹேமா மாலினி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கான் உள்ளிட்ட பிரபலங்களும் தர்மேந்திராவின் மகன்களான சன்னி தியோல், பாபி தியோல், மகள் இஷா தியோல் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

Hema Malini tweeted Dharmendra responding to treatment and is recovering and condemns false statements

பாலிவுட் மீடியாக்கள் அவசரப்பட்டு தர்மேந்திரா குறித்த தவறான தகவல்களை தெரிவித்த நிலையில், இதை மன்னிக்கவே முடியாது என ஹேமா மாலினி காட்டமாக பதிவிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மரண வதந்தி: பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மூச்சுத்திணறல் காரணமாக மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதற்கிடையில், நடிகர் இறந்ததாகப் பரவிய வதந்திகளை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். டிசம்பரில் 90 வயதை எட்டும் தர்மேந்திராவுக்கு தற்போது 89 வயது.

ஹேமா மாலினி காட்டம்: தர்மேந்திராவின் 2வது மனைவியான ஹேமா மாலினி, அவரது மறைவு குறித்த வதந்திகளுக்கு ட்விட்டரில் பதிலளித்தார். அதில், "நடந்து வருவது மன்னிக்க முடியாதது! சிகிச்சை பெற்று குணமடைந்து வரும் ஒருவரைப் பற்றி பொறுப்பான ஊடகங்கள் எப்படி தவறான செய்திகளைப் பரப்ப முடியும்? இது மிகவும் மரியாதைக்குறைவானது மற்றும் பொறுப்பற்றது. குடும்பத்திற்கும் அதன் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் உரிய மரியாதை கொடுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இஷா தியோல் விளக்கம்: தர்மேந்திரா மற்றும் ஹேமா மாலினியின் மூத்த மகள் இஷா தியோல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு, மரணம் குறித்த செய்திகளை மறுத்துள்ளார். அவர் தனது பதிவில், "ஊடகங்கள் அதிகப்படியான செய்திகளைப் பரப்பி வருகின்றன. என் தந்தை நலமுடன் குணமடைந்து வருகிறார். எங்கள் குடும்பத்தின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை அளிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். அப்பா விரைவில் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி" எனத் தெரிவித்திருந்தார்.

ஸ்ரீராம் ராகவனின் 'இக்கிஸ்' படத்தில் அகஸ்தியா நந்தா மற்றும் சிமர் பாட்டியாவுடன் நடிக்கவுள்ள தர்மேந்திரா, கடந்த சில வாரங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இருப்பினும், அவர் மற்றும் சன்னி தியோலின் குழு, இதற்கு முந்தைய மருத்துவமனை அனுமதி ஒரு வழக்கமான பரிசோதனை மட்டுமே என்று உறுதிப்படுத்தியது.

திங்கள்கிழமை மாலை சன்னியின் குழு வெளியிட்ட அறிக்கையில், "திரு. தர்மேந்திரா நலமுடன் உள்ளார். மேலும் தகவல்கள் கிடைத்தவுடன் பகிரப்படும். அவரது உடல்நிலை குறித்து தவறான வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அவர் விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்திக்குமாறும், குடும்பத்தின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை அளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்தது. தர்மேந்திரா கடைசியாக 'தேரி பாடன் மே ஆய்சா உல்ஜா ஜியா' என்ற படத்தில் நடித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X