ராஜ்யசபா எம்.பி. தேர்தல்-ஹேமமாலினி வெற்றி

கர்நாடக மாநிலத்திலிருந்து டெல்லி ராஜ்யசபாவுக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜசேகரமூர்த்தி. ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த இவர் சமீபத்தில் மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அந்த காலி இடத்தை நிரப்ப தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் இந்தி நடிகை ஹேமமாலினி போட்டியிட்டார். காங்கிரஸ், ஜனதாதளம்ம(எஸ்) ஆதரவு சுயேச்சை வேட்பாளராக மரளு சித்தப்பா நிறுத்தப்பட்டு இருந்தார்.
நேற்று காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், முதல்வர் எடியூரப்பா, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற்றது.
இதில், நடிகை ஹோமமாலினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஹேமமாலினிக்கு ஆதரவாக 106 வாக்குகள் கிடைத்தன. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) ஆதரவு சுயேச்சை வேட்பாளர் மரளு சித்தப்பா 94 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
வெற்றி பெற்ற ஹேமமாலினிக்கு முதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











