twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சித்ரா தற்கொலைக்கு ஹேமந்துதான் காரணம்.. சென்னை ஹைகோர்ட்டில் நசரத்பேட்டை போலீஸ் பரபரப்பு அறிக்கை!

    |

    சென்னை: சித்ரா தற்கொலைக்கு ஹேமந்தின் சந்தேகமே காரணம் என நசரத்பேட்டை போலீசார் சென்னை ஹைகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

    Recommended Video

    Hemanth Leaked audio | அவ தலையில அடி இருந்துச்சு வெளியான உண்மை

    பல தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றியவர் விஜே சித்ரா.

    தோத்துட்டேன் மச்சான்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போனில் உரையாடிய சோமசேகர்.. வைரலாகும் வீடியோ!தோத்துட்டேன் மச்சான்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போனில் உரையாடிய சோமசேகர்.. வைரலாகும் வீடியோ!

    விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து பெரும் பிரபலமானார்.

    பதிவு திருமணம்..

    பதிவு திருமணம்..

    லாக்டவுன் நேரத்தில் தனது காதலரான தொழிலதிபர் ஹேமந்துடன் சித்ராவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

    மண்டபத்திற்கு அட்வான்ஸ்

    மண்டபத்திற்கு அட்வான்ஸ்

    பிப்ரவரி மாதம் பிரபலங்கள் பலரையும் அழைத்து பிரமாண்டமாக ஊர் அறிய திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர். இதற்காக மண்டபம் எல்லாம் பார்த்து அட்வான்ஸ் தொகையும் கொடுத்தாகிவிட்டது.

    அதிகாலையில் தற்கொலை

    அதிகாலையில் தற்கொலை

    இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி இரவு ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு கணவருடன் சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். பின்னர் 9ஆம் தேதி அதிகாலையில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சித்ரா.

    நடத்தையில் சந்தேகம்

    நடத்தையில் சந்தேகம்

    அவரது மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் ஹேமந்த் சித்ராவின் நடத்தையில் சந்தேகப்பட்டதும், ஆபாசமாக பேசியதுமே அவரது தற்கொலைக்கு காரணம் என தெரியவந்தது.

    ஆர்டிஓ விசாரணை

    ஆர்டிஓ விசாரணை

    இதனை தொடர்ந்து ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருமணம் செய்து இரண்டு மாதங்களுக்குள் சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    பலரிடமும் தீவிர விசாரணை

    பலரிடமும் தீவிர விசாரணை

    இந்நிலையில் சித்ராவின் மரண வழக்கை நசரத் பேட்டை போலீசார் விசாரித்து வந்த நிலையில், அண்மையில் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சித்ரா சம்பந்தப்பட்ட பலரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    பெற்றோர் எதிர்ப்பு

    பெற்றோர் எதிர்ப்பு

    இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் கேட்டு, ஹேமந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் ஹேமந்துக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அவரது நண்பர் ரோஹித் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஹேமந்துக்கு ஜாமீன் வழங்க சித்ராவின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    தற்கொலைக்கு காரணம்

    தற்கொலைக்கு காரணம்


    இந்நிலையில் இந்த மனுக்கள் இன்று நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,
    காவல்துறை தரப்பில் நசரத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யபட்டது. அந்த அறிக்கையில் சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதாலேயே சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கழுத்தில் காயம் இல்லை

    கழுத்தில் காயம் இல்லை

    இதனிடையே சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான காயங்கள் கழுத்தில் இல்லை என அவரது பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து தற்கொலை தான் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போதும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருவதால் ஹேமந்துக்கு ஜாமின் வழங்குவது தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டுமென காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு

    பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு

    இதனைக் கேட்ட சென்னை ஹைகோர்ட், பிப்ரவரி 2ஆம் தேதிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் ஹேமந்த் ஜாமின் வழக்கில் இடையீட்டு மனுதாரரக அவரது நண்பர் சையதை அனுமதிக்க முடியாது என்று கூறி பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

    English summary
    Nazarath pettai police have filed a report in the Chennai High Court claiming that Hemant's suspicion was the reason for Chitra's suicide. Chennai high court postponed Hemanth bail case on Feb 2.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X