சித்ராவுக்கு விர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்க டாக்டர்க்கிட்டேயே கேட்ட ஹேமந்த்.. வெளியான பகீர் தகவல்!

சென்னை: நடிகை சித்ராவுக்கு கன்னித்தன்மை டெஸ்ட் எடுக்க வேண்டும் என அவரது கணவரான ஹேமந்த் மருத்துவர்களிடம் கேட்ட தகவல் வெளியகியுள்ளது.

Recommended Video

Hemanth Leaked audio | அவ தலையில அடி இருந்துச்சு வெளியான உண்மை

பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா கடந்த டிசம்பர் 9ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஹேமந்த் என்ற தொழிலதிபரை ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்திருந்தார் சித்ரா. பிப்ரவரியில் பிரபலங்களை அழைத்து விமர்சையாக திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார் சித்ரா.

உடம்பில் காயங்கள்

உடம்பில் காயங்கள்

ஆனால் அதற்குள் கணவருடன் அறையில் தங்கியிருந்தபோதே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திரைத்துறையினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சித்ராவின் முகம், தாடை, மார்பு ஆகிய இடங்களில் காயங்கள் இருந்ததால் அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்தது.

சந்தேகம்.. சண்டை..

சந்தேகம்.. சண்டை..

ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை சித்ராவின் மரணம் தற்கொலைதான் என்று உறுதி செய்தது. இதனை தொடர்ந்து சித்ராவின் கணவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சக நடிகர்களுடன் ஒப்பிட்டு சித்ராவை அவரது கணவர் ஹேமந்த் சந்தேகப்பட்டதும், சண்டை போட்டதும் தெரியவந்தது.

சித்ரா வழக்கு மாற்றம்

சித்ரா வழக்கு மாற்றம்

இதனை தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக ஹேமந்தை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். பின்னர் சித்ராவின் மரண வழக்கை நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வந்த நிலையில் வழக்கு மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டது.

நண்பர் திடுக் தகவல்

நண்பர் திடுக் தகவல்

சித்ராவின் மரணம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹேமந்தின் நண்பரான ரோஹித் என்பவர் தனியார் யூட்யூப் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் ஹேமந்த் குறித்து பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

நிம்மதியாக இருக்க விடவில்லை

நிம்மதியாக இருக்க விடவில்லை

அதாவது, பாண்டியன் ஸ்டோர்ஸில் சித்ராவுக்கு ஜோடியாக நடித்த நடிகர் குமரனை வைத்தே ஹேமந்த் அவரின் நடத்தையில் சந்தேகப்பட்டதாகவும் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறினார். மேலும் சித்துவை ஹேமந்த் நிம்மதியாக இருக்க விடவில்லை என்றும் எல்லாவற்றுக்கும் சந்தேகப்பட்டார் என்றும் கூறினார்.

விர்ஜினிட்டி டெஸ்ட்..

விர்ஜினிட்டி டெஸ்ட்..

ஹேமந்துக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் இரண்டு மாதங்களுக்கு மேல் யாருடனும் நட்பை தொடர மாட்டார் என்றும் கூறினார். இந்நிலையில் ஹேமந்த் சித்ராவின் கன்னித்தன்மை மீதே சந்தேகப்பட்டார் என்றும் அவருடைய விர்ஜினிட்டியை டெஸ்ட் செய்ய மருத்துவர்களிடம் கேட்டார் என்றும் கூறியுள்ளார்.

அப்பார்ட்மெண்டில் உள்ள மருத்துவர்

அப்பார்ட்மெண்டில் உள்ள மருத்துவர்

அதாவது என்னுடைய மனைவி ஒரு மருத்துவர். அவரிடம் சித்துவுக்கு விர்ஜினிட்டி டெஸ்ட் பண்ண வேண்டும். எப்படி பண்ண வேண்டும் என்று ஹேமந்த் கேட்டார். அவர்களின் அப்பார்ட்மெண்டுக்கு கீழ் தளத்தில் ஒரு மருத்துவர் கிளீனிக் வைத்திருக்கிறார். அவரிடமும் ஹேமந்த், சித்ராவுக்கு விர்ஜினிட்டி டெஸ்ட் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.

எங்களிடம் கூறி அழுதார்

எங்களிடம் கூறி அழுதார்


அந்த மருத்துவர் இதனை சித்ராவிடம் கூறியிருக்கிறார். இதனால் வேதனைப்பட்ட சித்ரா, என்னிடமும் என் மனைவியிடமும் தனிப்பட்ட முறையில் கூறி அழுதார். மற்றவர்களிடம் இப்படி போய் கேட்கிறாரே என்று ரொம்ப வருத்தப்பட்டார்.

எந்த அளவுக்கு கொடுமை?

எந்த அளவுக்கு கொடுமை?

இந்த மாதிரி ஒருத்தன் கேட்கிறான் என்றால், அவர் எந்தளவுக்கு அந்த பெண்ணை டார்ச்சர் பண்ணியிருப்பார். எந்தளவுக்கு கொடுமை பண்ணியிருப்பார். ஹேமந்துக்கு வேலை வெட்டி இல்லை என்பதை ஒரு ஸ்டேஜ்ஜுக்கு பிறகு நான் கூறினேன்.

திருத்தலாம் என்று நினைத்தார்

திருத்தலாம் என்று நினைத்தார்

ஆனால் அதற்குள் சித்துவுக்கு அந்த விஷயம் தெரிந்துவிட்டது. இவர்தான் நம்ம லவ்வர்ன்னு சொல்லிட்டோம். இவர் கல்யாணம் பண்ணிக்கிட்டு திருத்திடலாம் என்று சித்துவே ஒரு ரோலை எடுத்துக்கொண்டு தன்னை ஒரு போர்வையை போட்டு போர்த்திக் கொண்டார்.

உண்மையாக காதலித்தார்

உண்மையாக காதலித்தார்

நான் திருத்துவேன்.. ஹேமந்தை ஒரு லெவலுக்கு கொண்டு செல்லலாம்.. அவர் எந்த பக்கம் போனாலும் சப்போர்ட் பண்ணலாம் என்று நினைத்தார். இவ்வளவு ஏமாற்றப்பட்டும் இத்தனை பிரச்சனைகளை சந்தித்தும் சித்து ஹேமந்துக்கு ஆதரவாய் இருக்கிறார் என்றால் உண்மையாக காதலிக்கிறார், ஒரு லைஃப்பை ஸ்டார்ட் பண்ண போகிறார் என்று நினைத்தோம்.. இவ்வாறு ஹேமந்தின் நண்பர் ரோஹித் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X