வயதாகிவிட்டது. குடும்பம் என்னைத் தேடுகிறது. இனி சென்னையில் தான்... ஏ.ஆர்.ரகுமான்

சென்னை: குடும்பத்தை , குழந்தைகளை பிரிந்து இருப்பது கஷ்டமாக இருக்கிறது. வயதும் கூடி விட்டது. எனவே,இனி சென்னையிலேயே தங்கியிருந்து அதிக தமிழ் படங்களுக்கு இசையமைக்கப்போகிறேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்..

ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்கு இசையமைத்து, ஆஸ்கார் விருதைப் பெற்றப்பின் ஹாலிவுட் ஏ.ஆர்.ரஹ்மானை அமெரிக்காவிலேயே பிடித்து வைத்துக் கொண்டது. அதனால் தமிழ்ப்படங்களுக்கு இசையமைப்பதைக் குறைத்துக் கொண்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

தற்போது தனுஷ் நடிக்கும் மரியான் படத்திற்கு இசையமைத்து வரும் இவர், இனி அதிகளவில் தமிழ்ப்படங்களுக்கு இசை அமைக்கப் போவதாகக் கூறி இசை ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளார்.

ஏன் தமிழ்ப்படங்கள் குறைந்தன...?

ஏன் தமிழ்ப்படங்கள் குறைந்தன...?

ஆஸ்கார் விருது பெற்றபின், ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் வந்தன. அந்த வாய்ப்புகளை தவிர்க்க முடியவில்லை. ஒரு வருடம் அமெரிக்காவில் தங்கியிருக்க வேண்டியதாகி விட்டது. அப்படியிருந்தும் கூட, அங்கிருந்தபடியே ‘வீடியோ கான்பரன்சிங்' மூலம் தமிழ் பட வேலைகளையும் கவனித்தேன்.

எதிகாலத்தில் நிறைய தமிழ்ப்படம்...

எதிகாலத்தில் நிறைய தமிழ்ப்படம்...

நிச்சயமாக... இனிமேல் அதிக தமிழ் படங்களுக்கு இசையமைப்பேன். இப்போது கோச்சடையான், மரியான், கவுதம் மேனன் படம், சித்தார்த் நடிக்கும் புதிய படம், ராஜீவ்மேனன் டைரக்டு செய்யும் படம் என 5 தமிழ் படங்களுக்கு இசையமைத்து வருகிறேன்.

குடும்பம் தான் காரணம்...

குடும்பம் தான் காரணம்...

14 வருடங்களாக நாடு நாடாக சுற்றி விட்டேன். நான் சென்னையை விட்டு வெளிநாடுகளுக்கு புறப்படும்போதெல்லாம் என் மகன் அமீன், மகள்கள் ரஹிமா, கதீஜா ஆகிய மூன்று பேரும், ‘‘ஏன் டாடி வெளிநாட்டுக்கு போறீங்க, இங்கேயே இருந்து விடுங்களேன்...'' என்று ஏக்கத்துடன் கேட்கிறார்கள். அவர்களின் பிரிவை நானும் விரும்பவில்லை. பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். அவர்களின் விருப்பத்தை தந்தை என்ற முறையில் நான் நிறைவேற்ற வேண்டும் அல்லவா?

தமிழ்ப்படங்கள் தான் என் பர்ஸ்ட் சாய்ஸ்..

தமிழ்ப்படங்கள் தான் என் பர்ஸ்ட் சாய்ஸ்..

தமிழ் படங்களுக்கு இசையமைக்கத்தான் எனக்கு இஷ்டம். என் இசையில் படம் தயாரித்தவர்கள், இயக்கியவர்களுக்கு அது தெரியும்.

 யுவன் சங்கர் ராஜா பாடினாராம்...

யுவன் சங்கர் ராஜா பாடினாராம்...

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில், பரத்பாலா டைரக்டு செய்து, தனுஷ் நடித்துள்ள ‘மரியான்' படத்துக்காக, தனுஷ் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலை யுவன் பாடினால் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னார்கள். யுவன் ‘வாய்ஸ்' கேட்டு, அவரையே பாடவைத்தோம். ஒன்றரை மணி நேரத்தில் அவர் பாடி முடித்து விட்டார்.

இசை, வெற்றி–தோல்விக்கு அப்பாற்பட்டது...

இசை, வெற்றி–தோல்விக்கு அப்பாற்பட்டது...

‘சக்கரக்கட்டி' என்று ஒரு படத்துக்கு இசையமைத்தேன். அது, பெரிய நடிகர் படம் இல்லை. அந்த படம் தோல்வி அடைந்து விட்டது. நான் இசையமைக்கிறேன் என்றால், எதிர்பார்ப்பு அதிகமாகி விடுகிறது.

ரசிகர்களை ஏமாற்றமாட்டேன்...

ரசிகர்களை ஏமாற்றமாட்டேன்...

ஜனங்கள் எனக்கு ஒரு இடம் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களை நான் ஏமாற்றக்கூடாது. அவர்கள் கொடுத்த வாய்ப்பை தவறவிடக் கூடாது. சாதாரணமாக எந்த படமும் பண்ண முடியாத நிலையில், நான் மாட்டிக்கொண்டிருக்கிறேன். இசை, வெற்றி-தோல்விக்கு அப்பாற்பட்டது.

வயதாகிவிட்டது...

வயதாகிவிட்டது...

எனக்கு இப்போது நரை வந்து விட்டது. முன்பு மாதிரி ஒரேயடியாக இரவில் வேலை செய்வதில்லை என்றாலும், தேவைப்பட்டால் இரவு நேரங்களில் பணிபுரிகிறேன்'' என இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X