அஜித்தின் குட் பேட் அக்லி எப்படி இருக்கு?.. அடுத்த மங்காத்தாவா?.. ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

சென்னை: அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் முதல் காட்சி ஒன்பது மணிக்கு திரையிடப்பட்டாலும் பக்கத்து மாநிலங்களில் அதிகாலையிலேயே திரையிடப்பட்டது. இதன் காரணமாக அந்த மாநிலங்களுக்கு தமிழ்நாடு ரசிகர்களும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் குட் பேட் அக்லி முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படம் பற்றி தங்களது விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்கள்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதற்கிடையே ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கியமான ரோலில் ஆதிக் நடித்திருந்தார். அந்த சமயத்தில் அவர் அஜித்திடம் கதை சொன்னதாகவும் அதை டெவலப் செய்ய அஜித் சொன்னதாகவும் ஒரு தகவல் ஓடியது. இப்படிப்பட்ட சூழலில் திடீரென அஜித் - ஆதிக் கூட்டணி உறுதியானதாக அறிவிப்பு வெளியானது.

Ajith Good Bad Ugly

ஃபேன் பாய் ஆதிக் ரவிச்சந்திரன்: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் அஜித்தின் ரசிகர். மார்க் ஆண்டனி திரைப்படத்தில்கூட அஜித்தின் ரெஃபரன்ஸை வைத்திருப்பார். இதன்காரணமாக கண்டிப்பாக குட் பேட் அக்லியில் ஃபேன் பாய் சம்பவம் இருக்கும் எதிர்பார்த்தார்கள் ரசிகர்கள். அதற்கேற்றபடிதான் டீசர், ட்ரெய்லரில் அஜித்தின் பஞ்ச் டயலாக்குகளை வைத்திருந்தார். அது ஏகே ரசிகர்களுக்கு சரியான கூஸ் பம்ப்ஸாக அமைந்தது. மேலும் விடாமுயற்சியில் விட்டதை இதில் பிடித்துவிடலாம் என்கிற முழு நம்பிக்கையும் அவர்களுக்கு உருவானது.

குட் பேட் அக்லி ரிலீஸ்: படமானது ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படமானது இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. தமிழ்நாட்டில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. காலை 9 மணியிலிருந்து ஷோக்கள் ஆரம்பித்திருக்கின்றன. அஜித்தின் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும் அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினியும் முதல் நாள் முதல் காட்சி பார்த்தார்.

ரசிகர்களின் விமர்சனம்: இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு ஒரு ரசிகர் பேசுகையில், "இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் பிடித்திருந்த அதே டோனை பிடித்திருக்கிறார். படம் முழுக்க முழுக்க ஏகேவின் சம்பவம்தான். ஏகே வேற லெவல். அவ்வளவு ரெஃபரன்ஸ்களை வைத்திருக்கிறார். இந்தப் படத்தையும் அஜித்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் செதுக்கி வைத்திருக்கிறார். மங்காத்தாவுக்கு பிறகு ப்ளாக் பஸ்டர்.

ஒன் மேன் ஆர்மி: படத்துக்கு பிறகு இன்னொரு ரசிகர் பேசுகையில், "படம் முழுக்கவே ஏகேதான். ஏகேவுக்காகத்தான் பார்க்கலாம். ஒன் மேன் ஆர்மியாக செயல்பட்டிருக்கிறார்" என்றார். அவரைத் தொடர்ந்து ரசிகை ஒருவர் பேசுகையில், "மலேஷியாவிலிருந்து இங்கு முதல் ஷோ பார்ப்பதற்காக வந்திருக்கிறோம். படம் சூப்பராக இருந்தது. படம் பற்றிய ஹைப்பை ஏற்றிவிட்டார்கள். அந்த ஹைப்புக்காகத்தான் அங்கிருந்து இங்கு வந்தோம். இயக்குநர் ஏமாற்றவில்லை. ரொம்பவே என்ஜாய் செய்தோம்" என்றார். இப்படி ரசிகர்களும், ரசிகைகளும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகிறார்கள். அதேசமயம் இந்த டாக்ஸ் எல்லாம் முதல் நாள் முதல் காட்சி பார்த்த எக்ஸைட்மென்ட்டால் வந்திருக்கும்; கண்டிப்பாக அடுத்தடுத்த ஷோக்களில்தான் படத்தின் உண்மையான ரிசல்ட் தெரியவரும் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X