அஜித்தின் விடாமுயற்சி படம் எப்படி இருக்கு?.. இரண்டு தலைகள் தப்பியதா?..இதோ பார்த்தவர்களின் விமர்சனம்!

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியிருக்கிறது. படத்துக்கு எதிர்பார்ப்போடு வராதீர்கள் என்று மகிழ் திருமேனி கூறியிருந்தாலும் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. சூழல் இப்படி இருக்க தமிழ்நாட்டில் 9 மணிக்கு முதல் காட்சி தொடங்குகிறது. இந்நிலையில் வேறு மாநிலங்களில் விடாமுயற்சி படம் பார்த்தவர்கள் அவர்களது விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்கள்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த துணிவு திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு ரிலீஸானது. அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்ததை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார் ஏகே. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சியில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். முதன்முறையாக மகிழுடன் அஜித் இணைந்திருப்பதால் இந்தப் படம் எப்படி இருக்கும் என்ற ஆவல் கோலிவுட்டில் இருக்கிறது.

ajith vidaamuyarchi review

பெரிய எதிர்பார்ப்பு: முக்கியமாக அஜித் கடைசியாக நடித்த சில படங்கள் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரிலேயே வந்தன. அதேபோல் மகிழ் திருமேனி தன்னுடைய இரண்டாவது படமான தடையற தாக்க படத்திலிருந்து விடாமுயற்சிக்கு முன்னதாக இயக்கிய கலகத் தலைவன் படம்வரை ஆக்‌ஷன் ஜானரிலேயே இயக்கியிருக்கிறார். அப்படி அவர் இயக்கிய படங்கள் அத்தனையுமே ஹிட்டாகியிருக்கின்றன. இதன் காரணமாக மகிழ் - அஜித் கூட்டணியை பார்க்க கோலிவுட் தவம் இருந்தது.

இன்று ரிலீஸ்; படமானது முதலில் ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸாகவிருந்தது. ஆனால் சில பிரச்னைகளால் பிப்ரவரி ஆறாம் தேதிக்கு தள்ளிப்போனது. இதற்கிடையே படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தன. மேலும் சில நாட்களுக்கு முன்பு அஜித்தும், திரிஷாவும் இருந்த போஸ்டர்கள் வெளியாகி பட்டையை கிளப்பின. இப்படிப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் இன்று விடாமுயற்சி படம் பிரமாண்டமாக ரிலீஸாகியிருக்கிறது.

9 மணி காட்சி: தமிழ்நாட்டை பொறுத்தவரை படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கியிருக்கிறது. ஆனால் காலை ஆறு மணியிலிருந்தே ஏகே ரசிகர்கள் ஒவ்வொரு தியேட்டரையும் திருவிழா கோலம் பூண வைத்திருக்கிறார்கள்.குறிப்பாக அஜித் படம் ரிலீஸானால் அது பண்டிகை நாளாக மாறும் என்ற கூற்றுக்கேற்ப இந்த நாளை பண்டிகையாக கொண்டாடிவருகிறார்கள் ஏகே ரசிகர்கள். இந்நிலையில் படத்தை வெளி மாநிலங்களில் பார்த்தவர்களின் விமர்சனம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

எப்படி இருக்கு?: படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், ' படம் எதிர்பார்த்தபடி இல்லைதான். முதல் பாதி முழுக்க முழுக்க அஜித் படம். இரண்டாம் பாதியில் மெசேஜ் சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும் படத்தை ஒருமுறை பார்க்கலாம்' என்றார். அவரைத் தொடர்ந்து படம் பார்த்த ரசிகை கூறுகையில், 'அஜித் அவ்வளவு அழகாக இருக்கிறார். அவருக்கும், திரிஷாவுக்கும் இடையே கெமிஸ்ட்ரி பயங்கரமாக இருக்கிறது. குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்' என்று புகழ்ந்தார். அதேபோல் இன்னொரு ரசிகரோ, ' படம் ஹாலிவுட் ரேஞ்சில் இருக்கு. ஒவ்வொரு சீனையும் மகிழ் திருமேனி செதுக்கியிருக்கிறார். நிச்சயமாக அஜித் ரசிகர்களுக்கான படம் இது. கண்டிப்பாக குடும்பத்தோடு பார்க்க வேண்டும்' என்றார்.

2025 நாங்கதான்: படத்தை பார்த்த இன்னொரு ரசிகரோ, 'விஜய்க்கு 2026 என்றால் அஜித்துக்கு 2025. படம் சூப்பராக இருக்கிறது. இந்த வருடம் நாங்கதான்' என்று சொல்லிவிட்டு சென்றார். அவரைத் தொடர்ந்து வந்த இன்னொருவரோ, ' நான் விஜய்யின் ரசிகர்தான். ஆனால் படம் எனக்கு பிடித்திருக்கிறது' என்றார். அவரைத் தொடர்ந்து வந்த இன்னொரு ரசிகரோ, 'எதிர்பார்த்தபடி படம் இல்லை. முழுக்க முழுக்க அஜித்தின் ஷோதான். படத்தில் வரும் மெசேஜுக்காக ஒருமுறை பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு சென்றார். இப்படி விடாமுயற்சி கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X