ரஜினிகாந்த்தின் கூலி.. ஃப்ர்ஸ்ட் சிங்கிளில் நடனத்தை பார்த்து அசந்துபோன அனிருத்.. செம ஹேப்பியாம்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற சூழலில் கூலி படத்தை அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்கள். படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு படத்தின் முதல் சிங்கிளான சிகிட்டு பாடல் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
ரஜினிகாந்த்துக்கு ஜெயிலர் படத்துக்கு முன்பாக வெளியான அண்ணாத்த, தர்பார் ஆகிய படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன. இதனால் அவரது சாம்ராஜ்ஜியம் சாய்ந்துவிட்டதாக சொல்லப்பட்ட சூழலில்; ஜெயிலர் படம் அந்தப் பேச்சை மாற்றி வைத்தது. அப்படம் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அடுத்ததாக அவர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் எதிர்பார்ப்போடு வெளியானாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
கூலி கூட்டணி: வேட்டையன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் கமிட்டானார் அவர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்கிறது. இதில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

வெளியான வீடியோ: இந்தப் படத்தில் ரஜினிகாந்த் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் தொடங்கி நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஷூட்டிங் நடக்கும்போது யூனிட் ஆட்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் வெளியாவது நின்றது.
எப்போது ரிலீஸ்: படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அண்மையில்கூட அதுதொடர்பான வீடியோவும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக ரஜினிகாந்த்தை இதில் வேறு மாதிரிதான் காண்பிக்கப்போகிறேன் என்பதை லோகேஷ் க்ளியராக மேக்கிங் வீடியோவில் உணர்த்திவிட்டார் என்றும் ஃபேன்ஸிடமிருந்து கமெண்ட்ஸ் பறக்கின்றன.
முதல் சிங்கிள்: சில நாட்களுக்கு முன்புதான் படத்திலிருந்து முதல் சிங்கிளான சிகிட்டு பாடல் வெளியானது. அதனை அனிருத்துடன் சேர்ந்து டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார். வழக்கமான அனிருத் ஸ்டைலில் உருவாகியிருக்கும் பாடலுக்கு பலரும் வைப் செய்துவருகிறார்கள். அந்த பாடலின் வீடியோவில் ராஜேந்தர் நடனம் ஆடியதும் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
அனிருத்தின் ரியாக்ஷன்: அதாவது சிகிட்டு பாடலில் ரஜினிகாந்த்தின் நடனத்தை பார்த்த அனிருத், '70,80களில் ரஜினியை பார்த்தது மாதிரியே இருக்கிறது. முழு பாடலையுமே லோகேஷ் கனகராஜ் விஷுவலில் கலக்கிவிட்டார். ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது' என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ஹேப்பியோடு சொல்லிவருகிறார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











