படம் ஸ்லோதான்.. ஆனால் ரஜினி வாங்காத பெயரை குபேரா தனுஷ் வாங்கிவிட்டார்.. பிரபலத்தின் விமர்சனம்
சென்னை: சேகர் கம்முல்லா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் குபேரா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. தனுஷுடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் இப்படத்தில் பணியாற்றியிருக்கிறார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். பெரிய் எதிர்பார்ப்போடு படம் பார்க்க சென்ற ரசிகர்கள் படத்தை பார்த்து ஏமாறவில்லை. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் தனது விமர்ச்னத்தை முன்வைத்திருக்கிறார்.
தெலுங்கு திரையுலகில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் சேகர் கம்முல்லா. இவர் ஏற்கனவே இயக்கிய அனாமிகா, ஃபிடா உள்ளிட்ட ஏராளமான படங்கள் பெரிய வரவேற்பை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க தனுஷை வைத்து அவர் படம் இயக்கப்போவதாக வந்த அறிவிப்பை பார்த்து தனுஷின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதேசமயம் ஏற்கனவே தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரியுடன் இணைந்த வாத்தி படம் வாரிவிட்டதால் பயமும் கொண்டிருந்தனர்.
குபேரா: படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ட்ரெய்லர் என அத்தனையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்காக பெருக்கியது. அதுமட்டுமின்றி தனுஷுடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமும் இறங்கியிருந்ததால் படம் பந்தயம் அடிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள் ரசிகர்கள். இன்று படமானது உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியானது.

படம் திருப்தி: தனுஷ் தனது இளைய மகன் லிங்காவுடன் சென்னை ரோகிணி தியேட்டரில் படம் பார்த்தார். ரசிகர்களும் உற்சாகத்தோடு பல தியேட்டர்களில் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தார்கள். படம் பார்த்த ரசிகர்கள் இதுவரை தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தையே முன்வைத்துவருகிறார்கள். முக்கியமாக தனுஷின் நடிப்பு மெர்சல் செய்துவிட்டதாக மகிழ்ச்சியோடு கூறிவருகிறார்கள். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் குபேரா படம் பற்றிய தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
பயில்வானின் விமர்சனம்: அவர் தனது விமர்சனத்தில், "இந்தப் படத்தில் தனுஷ் பிச்சைக்காரராக நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார். அந்த அளவுக்கு மிக சிறப்பாக நடித்திருக்கிறார். பிச்சைக்காரராக ஒரு நடிகர் நடிப்பது சாதாரணமான விஷயமே இல்லை. கோயிலில் உண்மையாகவே பிச்சை எடுப்பவர்கள் மத்தியில் அடையாளமே தெரியாத அளவுக்கு போய் அமர்ந்துகொண்டு, ரோட்டில் எல்லாம் ஓடி செம மஜாவாக நடித்திருக்கிறார். அரிவாள், வெட்டு, துப்பாக்கி சத்தத்தோடு படம் பார்த்தவர்களுக்கு இந்தப் படம் வேறு மாதிரியான லெவலாக இருக்கும். தென்றல் காற்றை சுவாசித்தது போல் இந்தப் படத்தை பார்க்கும்போது இருக்கும்.
ரஜினிகூட வாங்கவில்லை: குபேரா படம் கொஞ்சம் ஸ்லோவாகத்தான் போகும். அட்ஜெஸ்ட் செய்துதான் ஆக வேண்டும். முதலில் இந்தப் படம் மூன்றரை மணி நேரம் இருந்தது. ஆனால் சுதாரித்துக்கொண்ட சேகர் கம்முல்லா படத்தின் அரை மணி நேரத்தை குறைத்துவிட்டார். இருப்பினும் படம் மூன்று மணி நேரம் ஓடுகிறது. நீங்கள் பொறுமைதான் காக்க வேண்டும். தனுஷுக்கு வேறு ரேஞ்சில் பெயர் கிடைக்கும். அதாவது அவரது முன்னாள் மாமனார் ரஜினிகாந்த் வாங்காத பெயர்கூட இதில் தனுஷ் வாங்குவார். ராஷ்மிகா மந்தனாவுக்கு இந்தப் படம் வேறு வாழ்க்கையை கொடுக்கும். நாகார்ஜுனா இந்தப் படத்தில் வில்லனா, நல்லவரா என்பது இயக்குநருக்குத்தான் தெரியும்.
சுமார்தான்: பாடல்களை பொறுத்தவரை சுமார்தான். அதேசமயம் பின்னணி இசையில் கலக்கிவிட்டார். இந்தப் படம் 200 கோடி ரூபாய்க்கு விற்பனையாகிவிட்டது. எனவே இது லாபம்தான். பணத்தையா சாப்பிட முடியும் போன்ற தத்துவங்களை கதையில் சொல்லியிருக்கிறார்கள். பணம் இருந்தால் நிம்மதி வந்துவிடும் என்ற எண்ணத்தை படம் உடைத்திருக்கிறது. படத்தில் ஆங்காங்கே கொஞ்சம் போர் அடிக்கிறதுதான். ஆனால் பொறுமையாக பார்க்க வேண்டும். இது நல்ல கதை" என்றார்.


Click it and Unblock the Notifications











