பன் பட்டர் ஜாம் படம் எப்படி இருக்கிறது?.. படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனம் என்ன தெரியுமா?

சென்னை: சின்னத்திரையில் தோன்றி பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபல்யம் அடைந்தவர் ராஜு. அப்போதிருந்து அவர் பிக்பாஸ் ராஜு என்று அழைக்கப்படுகிறார். அவர் இப்போது பன் பட்டர் ஜாம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ராகவ் மிர்தாத் இயக்க சுரேஷ் சுப்ரமணியம் படத்தை தயாரித்திருக்கிறார். இந்நிலையில் இன்று வெளியான அப்படத்துக்கு ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து நடிப்பு பயணத்தை தொடங்கிய ராஜு தொடர்ந்து அதே சேனலில் சரவணன் மீனாட்சி 2, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். எதார்த்தமான நடிப்பின் காரணமாக சின்னத்திரை உலகில் வேகமாக வளர்ச்சியடைந்தார். இருப்பினும் அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் தோன்றியது.

பிக்பாஸ் ராஜூ: சூழல் இப்படி இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அவர். அந்த நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபல்யம் அடைந்த அவர்; அன்றிலிருந்து இப்போதுவரை பிக்பாஸ் ராஜு என்று அழைக்கப்படுகிறார். ஒருவழியாக சினிமா கதவுகள் அவருக்கு திறந்ததால் துணை முதல்வர், மனிதன் ஆகிய படங்களில் சின்ன ரோல்களில் தலை காட்டினார். அடுத்ததாக அவர் நட்புனா என்னன்னு தெரியுமா படத்தில் சொல்லிக்கொள்ளும்படியான ரோலை ஏற்று தனது திறமையை வெளி காண்பித்தார். மேலும் டான் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.

Here are Bigg Boss Raju s Bun Butter Jam Movie Public Review
Photo Credit:

பன் பட்டர் ஜாம்: இந்நிலையில் பிக்பாஸ் ராஜு ஹீரோவாக பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் அறிமுகமாகியிருக்கிறார். அந்தப் படத்தை ராகவ் மிர்தாத் இயக்கியிருக்கிறார். ஜெய் நடிப்பில் எஸ்.கே. வெற்றிச்செல்வன் இயக்கிய எண்ணித்துணிக திரைப்படத்தை தயாரித்த Rain of Arrows நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீது அதீத நம்பிக்கையை வைத்திருக்கிறார் அவர்.

இன்று ரிலீஸ்: படமானது இன்று திரையரங்குகளில் ரிலீஸாகியிருக்கிறது. இதுவரை ஓரளவுக்கு பாசிட்டிவ்வான விமர்சனத்தை பெற்றிருக்கிறது படம். இப்போது படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனத்தை காணலாம். பன் பட்டர் ஜாம் படத்தை பார்த்த ஒரு ரசிகர், "இப்படத்தில் ஹீரோ ஹீரோயினைவிடவும் அப்பா, அம்மா கேரக்டரில் நடித்தவர்கள் சூப்பராக நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் நன்றாகத்தான் இருக்கிறது. எனக்கு திருப்தியையும் கொடுத்திருக்கிறது. படத்தின் முடிவு வித்தியாசமாக இருந்தது. ராஜுவின் நடிப்பை பார்க்கும்போது அவருக்கு முதல் படம் என்பது போல் தெரியவில்லை" என்றார்.

சுவாரஸ்யமான படம்: இன்னொரு ரசிகர் பேசுகையில், "படம் நன்றாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. ரிலேஷன்ஷிப் விவகாரத்தை நன்றாக காட்டியிருக்கிறார்கள். சென்சிபிளாக கையாண்டிருக்கிறார்கள். கதையில் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை கொடுத்திருக்கிறார்கள். ராஜூ சூப்பராக நடித்திருக்கிறார்" என்றார். அவரைத் தொடர்ந்து இன்னொரு ரசிகரோ, "படம் சூப்பராக இருக்கிறது. ராஜூ மிக அருமையாக நடித்திருக்கிறார். படத்தில் காமெடியும் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. தியேட்டர் மொத்தமும் சிரித்தது. குடும்பத்துடன் வந்து பார்க்கலாம்" என கூறி முடித்தார். இப்படி ரசிகர்களை பொறுத்தவரை பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுப்பதால் ராஜூவுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைத்திருக்கும்.

More from Filmibeat

Read more about: raju ராஜு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X