தனுஷின் குபேரா.. கதை படுத்துவிட்டது.. சோலி முடிந்தது.. சாட்டை சுழற்றிய ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
சென்னை: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படத்துக்கு ரசிகர்கள் பெரும்பாலும் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக தனுஷின் நடிப்பை அவர்கள் ஏகத்துக்கும் பாராட்டிவரும் சூழலில்; பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
தெலுங்கு திரையுலகின் முக்கியமான இயக்குநர்கள் லிஸ்ட்டில் இருப்பவர் சேகர் கம்முலா. அவர் தனுஷை வைத்து குபேரா படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானதிலிருந்தே இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. முக்கியமாக தெலுங்கு மார்க்கெட்டில் தனக்கான இடத்தை பிடிக்கும் திட்டத்தோடு அவர் நடித்திருந்த வாத்தி திரைப்படம் தோல்வியை சந்தித்தது போல் இதுவும் சந்தித்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அவர்கள் இருந்தார்கள்.
நேற்று ரிலீஸ்: படமானது நேற்று ரிலீஸானது. இதற்கு முன்னர் தனுஷ் நடித்திருந்த ராயன், கேப்டன் மில்லர் ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியைத்தான் சந்தித்தன. எனவே இதாவது அவருக்கு வெற்றியை தருமா என்ற உச்சக்கட்ட ஆவலோடு படம் பார்க்க சென்றார்கள். தியேட்டர்களுக்கு வெளியே திருவிழா போல் பட ரிலீஸை கொண்டாடிவிட்டு; முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக சீட்டில் அமர்ந்தார்கள் அவர்கள்.

பாசிட்டிவ் விமர்சனம்: அவர்களின் எதிர்பார்ப்பும், ஆவலும் முழுவதுமாக தவிடு பொடியாகவில்லை. படத்துக்கு அவர்கள் பாசிட்டி விமர்சனத்தையே கொடுத்தார்கள். அதிலும் தனுஷின் நடிப்பை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்; சேகர் சொன்னதுபோல் கண்டிப்பாக தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இப்படத்துக்கு பெறுவார் என்றும்; பிச்சைக்காரராகவே படம் முழுவதும் வாழ்ந்திருக்கிறார் என்றும் பாராட்டினார்கள்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் குபேரா படம் பற்றி பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். அவர் தனது விமர்சனத்தில், "கதையுடைய ஆரம்பம் எல்லாம் பிரமாதமாக இருந்தது. குறிப்பாக கார்ப்பரேட் முதலாளிகள், அவர்களது வாழ்க்கை முறையெல்லாம் உண்மைக்கு நெருக்கமாகவே இருந்தன. ஆனால் தனுஷ் தப்பித்து ஓடியதிலிருந்து கதை நீட்டி நிமிர்ந்து படுத்துவிட்டது.
கதை நகரவே இல்லை: தனுஷ் தப்பித்து ஓடிய பிறகு கதை எங்கும் நகரவே இல்லை. அதேபோல் இந்தப் படத்தில் எந்த கேரக்டரையும் ஒழுங்காக வடிவமைக்கவே இல்லை. நாகார்ஜுனாதான் மெயின் கேரக்டர். அவர் நல்லவரா கெட்டவரா என்று அவருக்கே தெரியவில்லை. பிறகு ஹீரோ அறிவாளியா இல்லை முட்டாளா என்பதும் தெரியவில்லை. ராஷ்மிகா மந்தனா கேரக்டர் எதற்கென்றே தெரியவில்லை. படத்தில் வில்லன் கேரக்டர் மட்டும்தான் ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது.
ஒட்ட நறுக்கியும் இவ்வளவா?: படத்தை மொத்தம் 10 மணி நேரம் எடுத்திருப்பார்கள்போல. மூன்று நாட்கள் முன்னர்வரை ஒட்ட நறுக்கிக்கொண்டிருந்தார்கள். ஒட்ட நறுக்கியும் படம் மூன்று மணி நேரம் வந்திருக்கிறது. இரண்டாம் பாதியில் ஷாயாஜி ஷிண்டே வரும் ஐந்து நிமிடங்கள் நன்றாக இருக்கிறது. தனுஷ் தத்ரூபமாக நடித்திருந்தார். அவரிடம் இருக்கும் பிரச்னை என்னவென்றால் திரையில் நன்றாக நடிப்பார்; மேடையில் நன்றாக நடிக்கமாட்டார். படத்தின் ஆரம்பத்தில் கார்ப்பரேட் முதலாளி, பிரைவேட் ஜெட், கோடி கோடியாக பணம் என்று வாண வேடிக்கை காண்பித்து; கடைசியில் குப்பை தொட்டியில் கொண்டுவந்து படத்தை முடித்தார்கள். அதோடு சோலியும் முடிந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











