அஜித்தின் குட் பேட் அக்லி.. இதுதான் படத்தின் கதையா?.. அட வேற லெவலா இருக்கே ப்பா
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகவிருக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் சிங்கிள் இன்னும் சில நாட்களிலும், படத்தின் ட்ரெய்லர் இந்த மாதத்தின் இறுதியில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் கதை குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
அஜித் நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கியிருந்த அந்தப் படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். பெரிய எதிர்பார்ப்பை வைத்து படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அஜித்துக்கு தேவையான மாஸ் சீன்களோ, பஞ்ச் டயலாக்குகளோ இல்லாதது அவர்களை வருத்தமடைய செய்தது. இதன் காரணமாக படத்துக்கு போதிய வரவேற்பு தியேட்டரிலும், ஓடிடியிலும் கிடைக்கவில்லை.

குட் பேட் அக்லி: இதற்கிடையே விடாமுயற்சி படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் கமிட்டானார் ஏகே. இதிலும் அவருக்கு ஜோடியாக திரிஷாதான் நடித்திருக்கிறார். மேலும் சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். முதலில் தேவிஸ்ரீ பிரசாத்தான் படத்துக்கு இசையமைப்பாளராக கமிட்டானார். ஆனால் அவருக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கும் பிரச்னை ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக ஜிவி பிரகாஷ் ரீ ப்ளேஸ் செய்யப்பட்டார்.
பட்டையை கிளப்பிய டீசர்: படத்தின் டீசரானது சமீபத்தில் வெளியானது. டீசரை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தார்கள். ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் அஜித்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மார்க் ஆண்டனி படத்தில்கூட அஜித் பற்றிய வசனம் வைத்திருந்தார். எனவே கண்டிப்பாக தரமான ஃபேன் பாய் சம்பவத்தை செய்திருப்பார் என்றுதான் பலரும் எதிர்பார்த்திருந்தார்கள். அதேபோல்தான் படத்தின் டீசரும் அமைந்திருந்தது. டீசரின் ஒவ்வொரு ஃப்ரேமும் அட்டகாசமாக இருந்தது; படம் கண்டிப்பாக மெகா ஹிட்டடிக்கும் என்று ஏகேவின் ரசிகர்கள் நம்பிக்கையோடு உலா வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஜிவி பிரகாஷின் பங்கு: இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் ஜிவி பிரகாஷும் தனது இசையை தரமாக கொடுக்கவிருப்பதாக கூறியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் எல்லோரும் ரிங் டோனை மாற்றும் நேரம் நெருங்கிக்கொண்டிருப்பதாக படத்தின் இசை குறித்து ஹைப் ஏற்றினார். அதனைத் தொடர்ந்து தனது எக்ஸ் தளத்தில் குட் பேட் அக்லி குறித்து பெருமையாகவே பதிவிட்டுவருகிறார். சமீபத்தில்கூட படத்தின் முதல் சிங்கிள் ஓஜி சம்பவம் என்று குறிப்பிட்டு ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிங்கிள், ட்ரெய்லர் எப்போது?: படத்தின் முதல் சிங்கிள் குறித்து ஜிவி பிரகாஷ் அவ்வாறு ட்வீட் போட்டதால் அதன் மீது பெரிய ஆவலை வைத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இன்னும் சில நாட்களில் அப்படத்தின் முதல் பாடல் வெளியாக வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அதேபோல் படத்தின் ட்ரெய்லர் இந்த மாத இறுதியில் கண்டிப்பாக வந்துவிடும் என்று நம்பப்படுகிறது. இதற்கிடையே இந்தப் படமானது ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அநேகமாக அதிகாலை காட்சி இருக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டிருக்கின்றன.
குட் பேட் அக்லியின் கதை: இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, மிகப்பெரிய கேங்ஸ்டராக இருந்த அஜித் அதையெல்லாம் விட்டுவிட்டு குடும்பத்துடன் நிம்மதியாக வாழ நினைக்கிறார். ஆனால் அவரது பழைய பகை அஜித்தை துரத்த ஆரம்பிக்கிறது. எனவே அவர் மீண்டும் வில்லன்களுடன் மோதி அந்தப் பகையை தீர்ப்பதுதான் கதை என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











