ஹெச்.வினோத்துடன் இணையும் நடிகர் ரஜினி இல்லையா?.. யப்பா செம காம்போ.. ஒரு முடிவோடுதான் இருக்காரு
சென்னை: விஜய்யை வைத்து ஜன நாயகன் படத்தை இயக்கிவருகிறார் வினோத். படமானது அடுத்த வருடம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அடுத்ததாக அவர் ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாக தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளியாகிக்கொண்டிருந்தன. இந்நிலையில் அவரது புதிய படம் பற்றி புதிய பேச்சு ஒன்று கோடம்பாக்கத்தில் எழ தொட்ங்கியிருக்கின்றன.
பார்த்திபனிடம் உதவி இயக்குநராக இருந்து சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். முதல் படத்திலேயே அவர் தேர்ந்தெடுத்திருந்த கதைக்களமும், அதனை அவர் ப்ரெசண்ட் செய்த விதமும் அனைவரையும் ஈர்த்துவிட்டது. படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டது. அதுமட்டுமின்றி அறிமுகமானவுடனேயே யார் இந்த இயக்குநர் என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள் என்பதுதான் உண்மை.
தீரன் அதிகாரம் ஒன்று: அந்தப் படத்துக்குப் பிறகு கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதேசமயம் காவல் துறையினர் என்கவுன்ட்டர் செய்வதையும், காவல் துறையையும் வினோத் ரொம்பவே புகழ்ந்திருக்கிறார் என்ற சர்ச்சையும் எழுந்தது. அதை காலப்போக்கில் அவரும் புரிந்துகொண்டு இனி இவ்வாறு படம் செய்ய மாட்டேன் என்றும் கூறினார்.

அஜித்துடன் கூட்டணி: முதல் இரண்டு படங்கள் மெகா ஹிட்டானதையடுத்து அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது வினோத்துக்கு. ஆனால் அஜித்துடன் இணைந்த முதல் படம் தனது சொந்த கதையாக இல்லாமல் பிங்க் படத்தை ரீமேக் செய்தார் வினோத். அப்படி ரீமேக் செய்யப்பட்ட நேர்கொண்ட பார்வை படம் கலவையான விமர்சனங்களை பெற அடுத்ததாக வலிமை படத்தை இயக்கினார். அந்தப் படமும் பெரிய வரவேற்பை எல்லாம் பெறவில்லை.
ஜன நாயகன் வினோத்: சூழல் இப்படி இருக்க விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்படும் ஜன நாயகன் படத்தை அவர் இப்போது இயக்கிவருகிறார். படத்தின் பெரும்பாலான பகுதி ஷூட்டிங் முடிந்துவிட்டது. விஜய்யும் தன்னுடைய போர்ஷனை முடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. படமானது ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இது அனைத்து தரப்பினருக்குமான படமாக இருக்கும் என்று வினோத் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.
அடுத்த படம்: இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே வினோத்தின் அடுத்த படம் பற்றிய பல தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. முதலில் யோகிபாபுவை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாக கூறப்பட்டது. அது உண்மையா இல்லையா என்று தெரிவதற்குள்ளாகவே ரஜினியை வினோத் சந்தித்து கதை சொல்லி; ஓகே வாங்கிவிட்டதாகவும்; அவர்கள் விரைவில் இணைவார்கள் என்றும் பேச்சு எழுந்தது.
புதிய தகவல்: நிலவரம் இவ்வாறு உள்ள நிலையில் இப்போது புதிதாக ஒரு முணுமுணுப்பு கோடம்பாக்கத்தில் கேட்கிறது. அதாவது அவர் துணிவு படத்தை முடித்த கையோடு தனுஷிடம் வினோத் ஒரு கதையின் அவுட் லைனை சொல்லி ஓகே வாங்கிவிட்டார்; ஜன நாயகனால் அந்தக் கதையின் பணிகள் தாமதமாகின; எனவே ஜன நாயகனை முடித்த கையோடு தனுஷிடம் சொன்ன கதைக்குதான் வினோத் வேலை பார்ப்பார் என்றும்; இரண்டு பேரும் இணைவது உறுதிதான்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











