கூலி படத்தில் விஜய் பட நடிகை.. அட லோகேஷ் கனகராஜ் ஒரு முடிவோடுதான் இருக்காரு போல

சென்னை: லோகேஷ் கனகராஜ் இப்போது ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கிவருகிறார். இதில் ரஜினியுடன் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள். வழக்கம்போல் அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துவருகிறது. இந்தப் படத்தின் மீது ஒட்டுமொத்த கோலிவுட்டின் பார்வையும் விழுந்திருக்கும் சூழலில் படத்தில் விஜய் பட நடிகை கமிட்டாகியிருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படம் பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக அந்தப் படத்தின் சில காட்சிகள் கொண்டாடப்பட்டாலும்; ஜெய் பீம் அளவுக்கு கொண்டாடப்படவில்லை. அதற்கு, வேட்டையன் ஞானவேல் படமாகவும் இல்லை; ரஜினிகாந்த் படமாகவும் இல்லை. இருந்தாலும் இந்த மாதிரியான ஒரு கதையில் நடித்ததற்கு ரஜினியை கொண்டாடலாம் என்று ரசிகர்கள் கூறினார்கள்.

rajinikanth coolie lokesh kanagaraj

லோகேஷுடன் ரஜினிகாந்த்: வேட்டையன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த். இதில் அவர் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். ஏற்கனவே தளபதி படத்தில் அவர் தேவா என்ற கேரக்டரை ஏற்றிருந்ததும்; அந்தப் படம் மெகா ஹிட்டாகி; கல்ட் க்ளாசிக் படமாக இன்றும் கொண்டாடப்படுவதும் குறிப்பிடத்தக்கது. எனவே கூலி படமும் அந்த மாதிரி அமையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

லோகேஷுக்கும் முக்கியம்: ரஜினிகாந்த் மட்டுமின்றி லோகேஷ் கனகராஜுக்கும் இந்தப் படம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதுவரை அவர் இயக்கிய படங்களில் லியோ தவிர்த்து அத்தனை படங்களும் ஹிட். ஆனால் லியோவோ தோல்வி என்பதை தாண்டி கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. முக்கியமாக பிளாஷ்பேக் போர்ஷனை வைத்து லோகேஷ் கனகராஜை செய்துவிட்டார்கள். எனவே இந்தப் படத்தின் மூலம் தான் சந்தித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறார்.

நட்சத்திர பட்டாளம்: எனவே இந்தப் படத்தை பார்த்து பார்த்து அவர் செதுக்கிவருவதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி இதிலும் பெரும் நட்சத்திர பட்டாளத்தை இறக்கியிருக்கிறார். அதன்படி நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் என பலர் நடித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் பற்றிய போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

விஜய் பட நடிகை: இந்நிலையில் கூலி படத்தில் இன்னொரு நடிகையும் இணைந்திருக்கிறார். அதாவது பிகில் படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜான் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். பிகிலில் அவர் ஆசிட் வீசப்பட்ட பெண் கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கூலி படத்தில் தான் இணைந்திருப்பதை சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உறுதிப்படுத்தியிருந்தார். மிக விரைவில் அவர் கூலி ஷூட்டிங்கில் பங்கேற்பார் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X