அப்படியெல்லாம் செய்ய முடியாது.. ரஜினியின் ஜெயிலர் 2.. சன் பிக்சர்ஸுக்கு கண்டிஷன் போட்டாரா நெல்சன்?
சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மெகா ஹிட்டானது. கடந்த வருடம் வெளியாகி உலகளவில் 700 கோடி ரூபாயை வசூலித்தது. அதனையடுத்து அந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகுமா என்று கேள்விகள் எழுந்த சூழலில்; அந்தப் படம் உருவாவது உறுதியாகியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்புதான் ப்ரோமோ வீடியோ ஷூட் நடைபெற்றதாக ஒரு தகவல் வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
தமிழ் சினிமாவின் தற்கால இயக்குநர்களில் முக்கியமானவர் நெல்சன் திலீப்குமார். டார்க் காமெடி ஜானரில் சிறப்பாக படங்கள் செய்யக்கூடிய அவர்; விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. முக்கியமாக மிகப்பெரிய ட்ரோலை அந்தப் படம் சந்தித்தது. கோலமாவு கோகிலா, டாக்டர் என்று வரிசையாக இரண்டு ஹிட்டுகளை கொடுத்த நெல்சனை ரசிகர்கள் வைத்து செய்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை. இதனால் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் அவர்.

ஜெயிலர்: அப்படி அவருக்கு கிடைத்த வாய்ப்புதான் ஜெயிலர். ரஜினிகாந்த் நடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க என பிரமாண்டமாக அந்தப் படம் உருவானது. ரஜினியுடன் மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு என பலர் நடித்தார்கள். நெல்சனுக்கு போலவே ரஜினிக்கும் ஜெயிலர் படம் முக்கியமானதாகவே பட்டது. ஏனெனில் அதற்கு முன்னதாக அவர் நடித்த அண்ணாத்த, தர்பார் ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியடைந்தன.
மெகா ஹிட் ஜெயிலர்: கடந்த வருடம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. ரஜினிகாந்த்துக்கு தேவையான மாஸ் சீன்கள், நெல்சன் ஸ்டைலில் டார்க் காமெடி என பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக படம் வெளியானது. படத்தை ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடி தீர்த்தனர். ரஜினிகாந்த்தை இப்படி பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டதாக கூறி படத்தை மெகா ஹிட்டாக்கினர். உலகளவில் 700 கோடி ரூபாய்வரை படம் வசூலித்து சாதனை படைத்தது. கடந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற ரெக்கார்டையும் ஜெயிலர் படம் வைத்திருக்கிறது.
ஜெயிலர் 2: சூழல் இப்படி இருக்க ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் என்ற தகவல்கள் அரசல் புரசலாக வந்துகொண்டிருந்தன. ஆனால் நெல்சனோ வாய் திறக்காமல் இருந்தார். ஒரு நிகழ்ச்சியில் அவர் இதுகுறித்து அவர் உறுதி செய்ததை அடுத்து ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்பு ஷூட் செய்யப்பட்டதாகவும்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
நெல்சனின் கண்டிஷன்: ரஜினி இப்போது கூலி படத்தில் நடித்துவருகிறார். அதற்கு பிறகு குட்டி ரெஸ்ட் எடுத்துவிட்டு ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவிருக்கிறார். இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது அடுத்த வருட தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்ததாகவும்; ஆனால் நெல்சனோ ரஜினியின் உடல்நிலை மற்றும் ஸ்க்ரிப்ட், ஷூட்டிங் வேலைகளை சுட்டிக்காட்டி கண்டிப்பாக இந்தப் படத்தின் வேலைகள் முடிய 13லிருந்து 15 மாதங்களாவது ஆகும். எனவே 2026ஆம் ஆண்டுதான் ரிலீஸ் செய்ய முடியும் என்று கறாராக கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











