ஜன நாயகன் படக்குழு போட்டிருக்கும் பிளான்.. ஓகே சொல்வாரா விஜய்.. ரசிகர்கள் ஆர்வம்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் ஜனநாயகன் படத்தில் நடித்துவருகிறார். அதுதான் அவரது கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. ஹெச்.வினோத் இயக்கிவரும் அந்தப் படத்தில் நடிப்பதற்காக சில வாரங்களுக்கு முன்பு தாண்டிக்குடி சென்று ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார் விஜய். இந்நிலையில் ஜன நாயகன் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
விஜய் கடைசியாக நடித்த GOAT,லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய நான்கு படங்களுமே பெரிய வரவேற்பை எல்லாம் பெறவில்லை. வசூல் ரீதியாக அப்படங்கள் கொண்டாடப்பட்டாலும் விமர்சன ரீதியாக பலத்த அடியையே வாங்கின. இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் என ஏராளமானோர் நடித்துவருகிறார்கள். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது.
தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே அவர் அரசியலுக்கும் வந்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் அவர் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காணவிருக்கிறார். சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் போலவே அரசியலிலும் தன்னுடைய தாக்கத்தை வீரியமாகவே செலுத்த வேண்டுமென்பதில் மிக தீவிரமாக அவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான அத்தனை பணிகளிலும் அவர் இறங்கிவிட்டார்.
ஜன நாயகன் எப்படி இருக்கும்?: விஜய்யின் கடைசி படம் இது என்று சொல்லப்பட்டிருப்பதால் இதன் மீது அவரது ரசிகர்கள் அதீத நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் வைத்திருக்கிறார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய இரண்டு படங்களின் மூலம் தன்னை மிகச்சிறந்த இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார் வினோத். எனவே விஜய்யை வைத்து கண்டிப்பாக தரமான சம்பவம் ஒன்றை செய்வார் என்றும் இப்போதே ரசிகர்கள் பேச தொடங்கிவிட்டார்கள்.
இறுதிக்கட்ட பணிகள்: படத்தின் இறுதிக்கட்ட மும்முரமாக நடந்துவருகின்றன. சில வாரங்களுக்கு முன்புதான் கொடைக்கானல் தாண்டிக்குடி பகுதியில் படத்தின் ஷூட்டிங் நடந்தது. இதன் காரணமாக விஜய் அங்கு சென்று படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இதற்கிடையே இந்தப் படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரியின் ரீமேக் என்றும் ஒரு தகவல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் அது மாதிரியெல்லாம் இருக்காது என்பதுதான் விஜய் ரசிகர்களின் நம்பிக்கை.

படம் எப்போது ரிலீஸ்: படமானது ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது. இதில் அவர் காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் என்றும்; விஜய்யின் பெயர் தளபதி வெற்றிக்கொண்டான் என வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க இப்படம் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்தான் என்றும் ஒரு தகவல் ஓடுவது குறிப்பிடத்தக்கது.
படக்குழுவின் பிளான்: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.அதாவது படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை இதுவரை விஜய் படங்களுக்கு நடக்காத அளவுக்கு நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும்; இதற்கு விஜய்யின் விரைவில் ஓகே வாங்கவிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கை சுமூகமாக முடித்த அவர் படக்குழுவின் ஆடியோ லான்ச் ஐடியாவுக்கு ஓகே சொல்வாரா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











