Indian 2 - நிதி நெருக்கடியில் இருக்கும் லைகா?.. வைத்து செய்யும் ஷங்கர்?.. இந்தியன் 2வில் இப்படி ஒரு மேட்டரா?

சென்னை: பிரமாண்ட இயக்குநர் என்று பெயர் எடுத்திருக்கும் ஷங்கர் கடைசியாக 2.0 படத்தை இயக்கினார். படம் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து கமல் ஹாசனை வைத்து இந்தியன் 2, ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் கேம் சேஞ்சர் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தெரிகிறது. ஆனால் இந்தியன் 2 படப்பிடிப்போ இன்னும் இழுத்துக்கொண்டே செல்வதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

ராஜமௌலிதான் இப்போது இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர். ஆனால் அவருக்கெல்லாம் முன்னோடி என்றால் இயக்குநர் ஷங்கர்தான். 90களிலேயே பிரமாண்டமாக படம் எடுத்தவர். அவருக்கு கடந்த சில வருடங்களாகவே சறுக்கல்தான் ஏற்பட்டிருக்கிறது. கடைசியாக அவர் இயக்கிய 2.0 படம் படுதோல்வியை சந்தித்தது. தற்போது அவர் கமல் ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்திலும், ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்திலும் கவனம் செலுத்திவருகிறார். முக்கியமாக இந்தியன் 2வை பிரமாண்ட வெற்றி படமாக கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்.

Here are New Information About Indian 2 Movie Shooting Update

இந்தியன் 2: இந்தியன் 2 திரைப்படம் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனையடுத்து கமல் ஹாசனும் அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்ததால் இந்தியன் 2 பரணில் ஏறியது. சூழல் இப்படி இருக்க விக்ரம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த கமல் இந்தியன் 2 பக்கமும் கவனத்தை திருப்பினார். இந்த முறை லைகா நிறுவனத்துடன் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிப்பில் இறங்கியது.

விறுவிறு ஷூட்டிங்: இரண்டு பெரிய நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதன் காரணமாக படத்தின் ஷூட்டிங் எக்ஸ்பிரஸ் வேகத்தில் சென்றது. இயக்குநர் வசந்தபாலனும் இப்படத்துக்காக சில போர்ஷன்களை இயக்கியிருக்கிறார். இந்தியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஷூட்டிங் நடந்தது. அனிருத் இசையமைக்கிறார். காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2 டீசர்: நிலைமை இப்படி இருக்க கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு இந்தியன் 2 படத்தின் டீசர் வெளியானது. டீசரை பார்த்த ரசிகர்கள் வழக்கமான ஷங்கர் டெம்ப்ளேட்டுக்குள்தான் இந்தப் படம் வருகிறது என்பது உறுதியாகியிருப்பதாக தெரிவித்து தங்களது சுமாரான வரவேற்பையே கொடுத்தனர். படமானது அநேகமாக மே மாதம் ரிலீஸ் ஆகலாம் என்று தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

ஒரு பாடல்: ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக படத்தின் ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி இருப்பதாகவும் அதனை ஷூட் செய்ய வேண்டும் என்றும் தயாரிப்பு தரப்பிடம் ஷங்கர் கூறியதாக தெரிகிறது. அந்தப் பாடலில் சித்தார்த்தும், பிரியா பவானி ஷங்கரும் நடனமாடவிருக்கிறார்களாம். இந்தப் பாடலை அந்நியன் படத்தில் வரும் அண்டங்காக்கா கொண்டைக்காரி போல் பிரமாண்டமாக எடுக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும்; அதற்காக 30 கோடி ரூபாய் பட்ஜெட் கேட்டதாகவும் சொல்லப்பட்டது.

நிதி நெருக்கடியில் லைகா?: ஆனால் லைகா நிறுவனமோ தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. அதனால்தான் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கூட தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். நிலைமை இப்படி இருக்க ஷங்கரோ ஒரு பாடலுக்கு 30 கோடி ரூபாய் கேட்கிறாரே என்று லைகா கையை பிசைந்ததாகவும்; அதனையடுத்து அந்தத் தொகையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்கியதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X