வாடிவாசல் நிலை என்ன?.. விடுதலை நடிகர் சொன்ன சூப்பர் அப்டேட்.. சூர்யா ரசிகர்கள் குஷி
சென்னை: சூர்யா நடிப்பில் கடைசியாக கங்குவா திரைப்படமும், வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக விடுதலை 2 படமும் வெளியாகின. இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து வாடிவாசல் படத்தில் பணியாற்றவிருக்கிறார்கள். அந்தப் படத்துக்கான பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இந்தச் சூழலில் இயக்குநரும், விடுதலை 2 படத்தில் அமுதன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவருமான தமிழரசன் வாடிவாசல் படம் பற்றி கூறியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சூர்யா தமிழ் சினிமாவின் நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தவர். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு கங்குவா திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. ஞானவேல் ராஜா தயாரிக்க சிவா இயக்கியிருந்தார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் திஷா பதானி, கருணாஸ், போஸ் வெங்கட், நட்டி நடராஜ், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. படம் பற்றி ஞானவேல் ராஜாவும், சூர்யாவும் பேசி பேசியே ரொம்ப ஹைப் ஏற்றி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

படுதோல்வி: ஆனால் அவர்கள் ஏற்றிவிட்ட ஹைப்புக்கு படம் ஒர்த்தே இல்லை என்று ரசிகர்கள் ஓபனாக கூறினார்கள். முக்கியமாக 2,000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருந்தார். ஆனால் இந்தப் படமோ 200 கோடி ரூபாயைகூட வசூலிக்கவில்லை. இதனால் சூர்யாவும், அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட அப்செட்டில் இருக்கிறார்கள். மேலும் ஓடிடியில் படம் வெளியான பிறகும் ரசிகர்கள் அந்தப் படத்தை கடுமையாக ட்ரோல் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்ரோ: இதன் காரணமாக எப்படியாவது ஒரு ஹிட்டை கொடுத்துவிட வேண்டுமென்பதில் சூர்யா தீவிரமாக இருக்கிறார். அந்தவகையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் படத்துக்கு ரெட்ரோ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று அந்தப் படத்தின் டீசர் வெளியானது. அதனைப் பார்த்த சூர்யாவின் ரசிகர்களோ கங்குவா படத்துக்கு தாங்கள் சந்தித்த விமர்சனத்துக்கு ரெட்ரோ படம் கண்டிப்பாக பதிலடி கொடுக்கும் என்கிற நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்திவருகிறார்கள்.
வாடிவாசல்: இதற்கிடையே இந்திய அளவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் கமிட்டானார் சூர்யா. சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்கிற சிறுகதையை வைத்து அந்தப் படம் உருவாகிறது. கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்தின் டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டது. ஆனால் வெற்றிமாறன் விடுதலை படத்தை இயக்க சென்றுவிட்டதால் இந்தப் படம் தள்ளிப்போனது. ஒருகட்டத்தில் படம் ட்ராப்பாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
தமிழரசன் பேட்டி: ஆனால் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று வெற்றிமாறன் விளக்கிவிட்டார். விடுதலை 2 படமும் ரிலீஸாகிவிட்டதால் அடுத்ததாக வாடிவாசலுக்குத்தான் செல்கிறார் வெற்றி. இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான தமிழரசன் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், "வாடிவாசல் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க தயாராக இரு என்று என்னிடம் வெற்றிமாறன் கூறியிருக்கிறார். கார்த்தியை வைத்து நான் இயக்கும் படத்தின் தேதிகளுக்கும், வாடிவாசலில் நான் நடிக்கும் தேதிகளுக்கும் கண்டிப்பாக பிரச்னை வராது என்று நம்புகிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











