போடு செம வீடியோ.. பிரதீப் ரங்கநாதனின் அடுத்த பட அறிவிப்பு.. ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு
சென்னை: பிரதீப் ரங்கநாதன் இப்போது வளர்ந்துவரும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். அவரது தோற்றம், நடிப்பு, டயலாக் டெலிவிரி அனைத்துமே ரொம்பவே சிம்ப்பிளாக இருப்பதால் ரசிகர்களிடம் எளிதாக கனெக்ட் ஆகிவிட்டார். இப்போது அவர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் கமிட்டாகி நடித்துவருகிறார். அதில் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அடுத்ததாக ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டோர் அந்தப் படத்தில் நடித்திருந்தனர். 90ஸ் கிட் கோமாவுக்கு சென்று தற்காலத்துக்கு திரும்பினால் என்ன நடக்கும் என்பதை அடிப்படையாக வைத்து படம் உருவானது. அந்தப் படத்துக்கு ரசிகர்கள் டீசண்ட்டான வரவேற்பை கொடுத்தார்கள்.

லவ் டுடே: இதனையடுத்து சில வருடங்கள் அமைதியாக இருந்த பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கிய குறும்படத்தை டெவலப் செய்து லவ் டுடே படத்தை இயக்கினார். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இவானா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இயக்குநர் பிரதீப் ரங்கநாதனே இதில் கதாநாயகனாகவும் நடித்தார். இந்தப் படம் அவர் கதாநாயகனாக அறிமுகமாகிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்சேஷனல் லவ் டுடே: லவ் டுடே திரைப்படம் இளைஞர்களை குறிப்பாக 2K கிட்ஸை வெகுவாக கவர்ந்துவிட்டதாலும், காதலர்களுக்குள் நடக்கும் ஊடலையும், கூடலையும் தற்காலத்திற்கேற்ப காட்சிப்படுத்தியிருந்ததாலும் மெகா ஹிட்டானது. ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று திரைப்படத்தை ரசித்தனர். மேலும் படம் திரையரங்குகளீல் 100 நாள்கள் ஓடி சாதனை படைத்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டு: இதற்கிடையே லவ் டுடே படத்தை பார்த்த ரஜினி பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டி சால்வை அணிவித்தார். அதுமட்டுமின்றி பிரதீப் ரங்கநாதனிடம் தனக்கு ஒரு கதை செய்ய ரஜினி சொன்னதாகவும் தகவல் பரவியது. மேலும் படமானது ஹிந்தியில் ரீமேக்காகிறது. இந்தப் படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் ரொம்பவே பிரபலமாகிவிட்டார்.
நடிகர்: லவ் டுடே படத்துக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்ஹ்டில் LIC (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்ற படத்தில் நடித்துவருகிறார். அஜித்தை வைத்து இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன் அதிலிருந்து வெளியேறிய பின் இப்படத்தை இயக்குவதால் இதன் கதை மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க; எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் முக்கிய ரோலில் கமிட்டாகியிருக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன.
அடுத்த படம்: இந்நிலையி பிரதீப் ரங்கநாதன் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறார் பிரதீப். அதற்கான அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், அஸ்வத் - பிரதீப் ஆகிய இரண்டு பேரும் தோன்றுகின்றனர். 10 வருடங்களுக்கு முன்பு தாங்கள் எடுத்த குறும்படத்தின் காட்சியை ரீ க்ரியேட் செய்வது போன்று அந்த வீடியோ அமைந்திருக்கிறது. படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படுகிறது. அர்ச்சனா கல்பாத்தி படத்தை தயாரிக்கிறார்.


Click it and Unblock the Notifications











