சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்

சென்னை: சோனியா அகர்வால் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம்வந்தவர். இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சில காரணங்களால் விவாகரத்து பெற்றார். அதன் பிறகு சிங்கிளாகவே வாழ்ந்துவரும் அவர் சில காலம் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் கடைசியாக அவர் பகீரா படத்தில் நடித்திருந்தார். மேலும் சில படங்களில் கமிட்டாகியிருக்கும் அவர் இன்று தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

சண்டிகர் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட சோனியா அகர்வால் தனது பள்ளி காலத்திலேயே ஜீ டிவியில் ஒளிபரப்பான சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்ததால் இவருக்கு ஹீரோயின் ஆசையும் தோன்றியது. அதன்படி 2002ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நீ பிரேமகல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படம் ஓரளவையே வரவேற்பை பெற்றது. அதனையடுத்து கன்னட திரையுலகில் சந்து திரைப்படம் மூலம் எண்ட்ரி கொடுத்தார் சோனியா.

Here are the details about Actress Sonia Agarwal Net Worth

தமிழில் அறிமுகம்: தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்த சோனியா அகர்வால், தமிழில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படம்தான் தனுஷ், செல்வராகவன் ஆகியோருக்கு பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அவர்களுக்கு போலவே சோனியா அகர்வாலுக்கும் நல்ல அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. படம் மெகா ஹிட்டடிக்க சோனியா அகர்வாலும் பெரும் கவனத்தை ரசிகர்களிடையேயும் திரைத்துறையினரிடையேயும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த படங்கள்: காதல் கொண்டேன் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அந்தவகையில் கோவில், மதுர உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் இரண்டாவது முறையாக செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த அனிதா கதாபாத்திரம் அப்ளாஸை அள்ளியது. போல்டான பெண்ணாக நடிப்பில் அதகளம் செய்திருந்தார் அவர். அந்தப் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு ஒரு கல்லூரியின் கதை, திருட்டுப்பயலே, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

செல்வராகவனுடன் திருமணம்: சூழல் இப்படி இருக்க இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை பாதியிலேயே முடிந்தது. அதன் பிறகு 2011ஆம் ஆண்டு வெளியான வானம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்த அவர் தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக பகீரா திரைப்படம் வெளியானது.ஆனால் அவர் நடித்த காட்சிகள் படத்திலிருந்து தூக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று பிறந்தநாள்: இந்தச் சூழலில் அவர் இன்று தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் சோனியா அகர்வாலின் சொத்து மதிப்பு குறித்த தகவல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதன்படி அவருக்கு மொத்தம் 40 கோடி ரூபாய்வரை சொத்து மதிப்பு இருக்கலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் டைவர்ஸுக்கு அப்புறம் சிங்கிளாக இருந்தாலும் கெத்தாக இருக்கிறாரே சோனியா என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X