தொடர்ந்து சம்பவம் செய்யும் அரண்மனை 4.. அடேங்கப்பா 5 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

சென்னை: இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்து பிறகு இயக்குநராக அறிமுகமானவர் சுந்தர்.சி. 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் அவர் இப்போது அரண்மனை 4 படத்தை இயக்கியிருக்கிறார். இதற்கு முன்பு வெளியான அரண்மனை படத்தின் மூன்று பாகங்களுமே டீசண்ட்டான வரவேற்பை பெற்றவை. அதேபோல் அரண்மனை 4ம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் படம் வெளியாகி ஐந்து நாட்கள் முடிந்திருக்கும் சூழலில் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

முறைமாமன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுந்தர்.சி. அந்தப் படம் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியானது. முதல் படமே மெகா ஹிட்டானது. முக்கியமாக படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் அனைத்தும் இன்றுவரை அனைவரையும் சிரிக்க வைப்பவை. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், நாம் இருவர் நமக்கு இருவர், உன்னைத்தேடி, உனக்காக எல்லாம் உனக்காக என அவர் இயக்கிய படங்கள் மெகா ஹிட்டடித்தன.

Here are the details about Aranmanai 4 Movie Box Office Report

காமெடி ஜானர் கிங்: சுந்தர்.சியின் இயக்கத்தில் வெளியான படங்களில் காமெடி காட்சிகள் சிரிப்பு சரவெடியை பற்ற வைப்பவை. வின்னர்,உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, அருணாச்சலம் என அவர் இயக்கிய படங்களில் சுந்தர் எழுதிய காமெடி காட்சிகள் இன்றுவரை சிரிப்பு வரவைக்கக்கூடியவை. அதன் காரணமாகவே அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அரண்மனை சீரிஸ்: இடையே ஹீரோவாகவும் நடிக்க தொடங்கிய அவர் கலகலப்பு படத்தை இயக்கி தனக்குள் இருக்கும் இயக்குநர் இன்னும் இறக்கவில்லை என்பதை நிரூபித்தார். பிறகு அரண்மனை படத்தை இயக்கினார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தொடர்ந்து அந்தப் படத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது பாகங்களை இயக்கினார். அந்தப் படங்களும் டீசண்ட்டான வரவேற்பை பெற்றன. தற்போது அவர் அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தை இயக்கியிருக்கிறார். படம் ரிலீஸாகி பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றுவருகிறது.

ரசிகர்களுக்கு செம விருந்து: முக்கியமாக அரண்மனை 4 படத்தை ஃபேமிலி ஆடியன்ஸும், குழந்தைகளும் கொண்டாடிவருகின்றனர். த்ரில்லிங்கும், காமெடியும் சரியாக ஒர்க் அவுட் ஆகியிருப்பதன் காரணமாக கொண்டாடப்படுகிறது. மேலும் தமன்னாவின் நடிப்பும் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. ஹிப் ஹாப் தமிழாவின் பின்னணி இசையும் மிரட்டலாக இருக்கிறது என்று படம் பார்த்தவர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். இதனால் இந்தப் படம் ஹிட் வரிசையில் இணைந்துவிட்டது.

வசூல் நிலவரம்: விமர்சன ரீதியாக செம ரெஸ்பான்ஸை பெற்றிருக்கும் அரண்மனை 4 வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போடுகிறது. அதன்படி, படம் வெளியான முதல் நாளில் 4.65 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 6.25 கோடி ரூபாயும் வசூல் செய்து முதல் இரண்டு நாட்களிலேயே 10 கோடி ரூபாய் வசூலையும், மூன்றாவது நாளில் 7 கோடி ரூபாயும் வசூலித்தது. அதற்கு அடுத்த நாளும் வசூல் எகிறிய சூழலில் இப்போது ஐந்து நாட்கள் முடிவில் மொத்தம் 33 கோடி ரூபாய்வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. எனவே விரைவில் இப்படம் 50 கோடி க்ளப்பில் இணைந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X