சல்மான் கான் - அட்லீ இணையும் படத்துக்கு இவ்வளவு பட்ஜெட்டா?.. வேற லெவலில் போகுதே பாஸ்

மும்பை: ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ; தற்போது இந்திய அளவில் ஃபேமஸான இயக்குநராகியிருக்கிறார். கடைசியாக அவரது இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து கெத்து காண்பித்தது. அடுத்ததாக அட்லீ யாரை இயக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்த சூழலில்; சல்மான் கானை வைத்து ஒரு படம் இயக்குகிறார் என்று தகவல்கள் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கின்றன.

ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. அந்தப் படம் மௌன ராகத்தின் ரீமேக் என்று விமர்சனமும், கிண்டலும் செய்யப்பட்டாலும் அதன் மேக்கிங் பலரையும் வாய் பிளக்க வைத்தது. அதில் இருந்த ரிச் லுக்கை பார்த்து இந்த இயக்குநர் கண்டிப்பாக தவிர்க்க முடியாத இயக்குநராக வருவார் என்று ஆரூடம் கூறப்பட்டது. மேலும் அந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி நூறு நாட்கள்வரை தியேட்டரில் ஓடியது.

atlee salman khan jawaan

விஜய்யுடன் பயணம்: முதல் பட ஹிட்டுக்கு பிறகு விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். அந்தப் படமும் சத்ரியன் படத்தின் ரீமேக் என்று குறை சொல்லப்பட்டது. இருந்தாலும் வழக்கம்போல் அந்தப் படமும் மெகா ஹிட்டடித்தது. தெறி படத்துக்கு பிறகு மீண்டும் விஜய்யை வைத்து மெர்சல்,பிகில் ஆகிய படங்களை இயக்கினார் அட்லீ. இரண்டு படங்களில் மெர்சல் மெகா ஹிட்டடிதது. குறிப்பாக விஜய்க்கு முதன்முறையாக நூறு கோடி வசூல் செய்த படம் என்ற பெயரையும் பெற்றது.

ஹிந்திக்கு சென்ற அட்லீ: ஆனால் பிகில் படம் படுதோல்வியை சந்தித்தது. அதற்கு காரணம் அட்லீ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஓவராக பேசியதுதான் என்று அப்போது பேச்சுக்கள் கிளம்பின. சூழல் இப்படி இருக்க யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹிந்தியில் படம் இயக்க சென்றார் அவர். முதல் ஹிந்தி படத்திலேயே ஷாருக்கானை ஹீரோவாக ஃபிக்ஸ் செய்தார். அவருடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, அனிருத் என தென்னகத்துக்காரர்களை ஒட்டுமொத்தமாக இறக்கினார்.

மெகா ஹிட் ஜவான்: கடந்த வருடம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் வெளியாகி மெகா ஹிட்டானது. ஆனால் தமிழ்நாட்டில் அந்தப் படம் பெரிதாக எடுபடவில்லை. அதேசமயம் வட இந்தியாவில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இது ஒரு மூவி மிக்சர்; தனது படங்களிலிருந்தே காப்பி அடித்திருக்கிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் வந்து விழுந்தன. ஆனால் படம் ஆயிரம் கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. இதனால் இந்திய அளவில் ஃபேமஸான இயக்குநராக மாறினார் அட்லீ.

அட்லீயின் அடுத்த படம்: ஜவான் வெற்றியால் ஹிந்தியில் அட்லீக்கு நல்ல டிமாண்ட் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. அவரும் முழுக்க ஹிந்தியில் கவனம் செலுத்துகிறார். இந்நிலையில் அவர் அடுத்தது யாரை வைத்து இயக்கப்போகிறார் என்று கேள்விகள் எழுந்த சூழலில்; சல்மான் கானை அவர் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்போது அந்தப் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தின் பட்ஜெட் மட்டும் மொத்தம் 250 கோடி ரூபாயை தாண்டும் என்கிறது பாலிவுட் வட்டாரம். இதற்கிடையே தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தை அட்லீ தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X