எப்படி இருக்கு பிக்பாஸ் வீடு?..எடுத்ததுமே ட்விஸ்ட்தான்..சம்சாரம் அது மின்சாரம் மாதிரி பிரச்னை வருமோ?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்று தொடங்கியிருக்கிறது. விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் இந்த சீசன் மீது மேலும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இன்று முதல் நாளுக்கு அவர் கெத்தாக உள்ளே நுழைந்தார். பிறகு ஆடியன்ஸுடன் பேசிவிட்டு பிக்பாஸ் வீடு எப்படி இருக்கிறது என்பதை பார்த்தார். அப்போது வீட்டில் ஏகப்பட்ட விஷயங்கள் இருப்பது தெரிந்திருக்கிறது. இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கிறது. இதுவரை கமல் ஹாசன் தொகுத்து வழங்கிவந்தார். ஆனால் கடந்த சீசனில் அவர் மீது சில விமர்சனங்கள் வந்தன. சூழல் இப்படி இருக்க அவர் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். அதனையடுத்து நடிகர் விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு கமிட்டாகியிருக்கிறார். இதன் காரணமாக இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு மக்களிடையே ஆவலும் அதிகரித்திருக்கிறது.

vijay sethupathi bigg boss 8

பிக்பாஸ் 8: அக்டோபர் ஆறாம் தேதி பிக்பாஸ் 8 தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது அதன்படி இன்று நிகழ்ச்சியானது தொடங்கியிருக்கிறது. விஜய் சேதுபதி க்ரே நிற கோட் சூட் அணிந்தபடி மீசை இல்லாமல் படு ஸ்மார்ட்டாக என்ட்ரி கொடுத்தார். அவர் வந்ததும் ஆடியன்ஸிடம் பேசினார். அப்போது, 'சில நாட்கள் நான் எழுந்திருக்கும்போது ராஜாவாக இருப்பேன். சில நாட்கள் அரக்கனாக இருப்பேன். எனவே தீர்ப்பு கொடுக்கும் நாளில் நான் எப்படி இருப்பேனோ என்று எனக்கு தெரியாது.

ஸ்மார்ட் ஸ்பீச்: அதேபோல் நீங்களும், நானும் சேர்ந்துதான் தீர்ப்பு கொடுக்கப்போகிறோம். போட்டியாளர்கள் என்னை எதுவும் கேட்டால் உங்கள் மீது பழி போடுகிறேன். உங்களிடம் எதுவும் கேட்டால் என் மீது பழியை போடுங்க”என்று தனது ட்ரேட்மார்க் சிம்பிளான ஸ்பீச்சை கொடுத்தார். அவரது பேச்சுக்கு இப்போதே அரங்கில் கரகோஷம் எழுவதால்; அவர் வாரா வாரம் வரும்போது அதற்கான ரெஸ்பான்ஸ் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் வீடு: ஆடியன்ஸோடு சிம்பிளாக பேசிவிட்டு வீட்டை சுற்றிப்பார்க்க சென்ற விஜய் சேதுபதி. வீட்டில் அவருக்கு பிக்பாஸ் தனது வரவேற்பை கொடுத்தார். மேலும் உங்களை விஜய குருநாத சேதுபதி என்று அழைக்கவா இல்லை சேது என்று அழைக்கவா என்று கேட்டார். அதற்கு விஜய் சேதுபதி, 'எனது பெயரை முழுதாக அழைத்தால் ஷோ முடிந்துவிடும்; எனவே சேது என்றே அழைக்கும்படி கேட்டுக்கொண்டார். பிக்பாஸ், விஜய் சேதுபதியின் உரையாடலும்கூட ரசிக்கும்படியாகத்தான் இருந்தது.

எப்படி இருக்கு வீடு: இந்நிலையில் பிக்பாஸ் வீடு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். அதன்படி வீட்டுக்குள் நுழைந்ததும் நடுவில் ஒரு கோடு இருக்கிறது. அதாவது சம்சாரம் அது மின்சாரம் பட கோட்டினை போல் இருக்கிறது. போனமுறை ஸ்மால் ஹவுஸ் என்பதுபோல் ஏதேனும் அந்தக் கோட்டுக்குள் ட்விஸ்ட்டாக இருக்குமோ என்று ரசிகர்கள் சந்தேகமடைந்திருக்கின்றன. அதேபோல் இரண்டு பெட்ரூம்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றில் மூன்று பேராக போட்டியாளர்கள் படுக்கும்படியும், அதேபோல் தனியாக படுக்கும்படி என படுக்கையறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் கிச்சனில் ஒரு அழகான ஊஞ்சல் தொங்கவிடப்பட்டிருக்கிறது. அதிலும் ஏதேனும் ட்விஸ்ட் இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள். மேலும் இரண்டு பாத்ரூம்கள் இருக்கின்றன. லிவிங் ஏரியாவில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. கன்ஃபெஷன் ரூமை பொறுத்தவரை இந்த முறை கொஞ்சம் வெளிச்சமாகவும் இருக்கிறது. போன முறை மாதிரி ஸ்மால் ஹவுஸ் இந்த முறை இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X