Kubera - தனுஷின் குபேரா.. இதுதான் கதையா?.. என்னங்க அந்தப் பட வாடை அடிக்குது.. ரசிகர்கள் கமெண்ட்ஸ்
இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் தனுஷ். அவர் கடைசியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான அந்தப் படம் கோயில் நுழைவு போராட்டத்தையும், சாதிய ஏற்றத்தாழ்வையும், வெள்ளைக்காரர்கள் ஆட்சிக்காலத்தையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. முக்கியமாக கேப்டன் மில்லருக்கு போட்டியாக களமிறங்கிய சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கல் ரேஸில் பந்தயம் அடித்தது.

தனுஷ் அப்செட்: தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட ஹீரோவிடமே தோற்றுவிட்டோமே என்று தனுஷ் கொஞ்சம் அப்செட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க கேப்டன் மில்லர் படத்துக்கு அடுத்ததாக அவர் தனது 50ஆவது படத்தில் நடித்திருக்கிறார். அதனை அவரே இயக்கவும் செய்திருக்கிறார். படத்துக்கு ராயன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்தப் படத்தை மெகா ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இருக்கிறார். படத்தில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
அடுத்த படம்: ராயன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே சேகர் கம்முல்லாவின் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் தனுஷ். ஏற்கனவே வாத்தி படத்தில் நடித்து கையில் சூடுபோட்டுக்கொண்ட அவர் மீண்டும் ஏன் தெலுங்கு இயக்குநருடன் கைகோர்க்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டனர். ஆனால் வாத்தி படத்தில் விட்டதை இந்தப் படத்தில் பிடித்து தெலுங்கில் தனக்கென தனி மார்க்கெட்டை நிலைநாட்டும் நோக்கத்தில் அவர் இருக்கிறார் என திரைத்துறையில் பேச்சு ஓடுகிறது.
குபேரா: படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் தனுஷ் தாடியும், தம்பட்டையுமாக பிச்சைக்காரர் போல் இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் தனுஷின் கெட்டப்பே வேற மாதிரி இருக்கிறதே. அப்போ கதை எப்படி இருக்கும் என்று சமூக வலைதளங்களீல் ஆர்வத்தோடு பேச ஆரம்பித்தனர். இந்தச் சூழலில் குபேரா படத்தின் கதை குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
என்ன கதை: அதாவது இந்தப் படம் பணத்தை மையமாக உருவாக்கப்பட்டிருக்கிறதாம். பணத்தால் ஒருவரின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை ஒன்லைனாக வைத்து குபேராவை சேகர் கம்முல்லா இயக்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்ன லைட்டா பிச்சைக்காரன் பட வாடை அடிக்குது. அதிலும் இப்படித்தான் பெரும் பணக்காரனாக இருக்கும் விஜய் ஆண்டனி; தனது தாய்க்காக பிச்சைக்காரனாக மாறுவார். அதுபோல் இதில் இருந்துவிடுமோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
யார் யார் நடிக்கிறார்கள்: இப்படத்தில் தனுஷுடன் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமீபத்தில்தான் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டானது. இதனால் படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











