Vijay Students Meet - விஜய் கல்வி விருது விழாவில் செம விருந்து.. என்ன மெனு தெரியுமா?

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் நடிகர் விஜய். அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்று நீண்ட காலமாக பேச்சு எழுந்த சூழலில் அதனை உறுதிப்படுத்தினார். அதேசமயம் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது என்றும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில்தான் போட்டியிடும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் 10 மற்றும் 12ஆவது வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியான விஜய் கல்வி விருது விழா இன்று நடந்தது.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருப்பவர் விஜய். பல நூறு கோடி ரூபாய் அவர் படங்களுக்கு வியாபாரம் நடக்கும். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இந்த இடத்துக்கு வந்திருக்கும் அவர் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி மக்களுக்கு நலத்திட்ட பணிகளை செய்துவந்தார். அப்போதிருந்தே விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்று பலரும் ஆரூடம் கூற ஆரம்பித்தனர். ஆனால் விஜய்யோ வழக்கமான சைலெண்ட் மோடிலேயே இருந்தார். இதனால் வருவாரா வரமாட்டாரா என்ற குழப்பமும் அவரது ரசிகர்களுக்கு எழுந்தது.

Vijay Students Meet Tamizhaga Vetri Kazhagam

தமிழக வெற்றிக் கழகம்: ஆனால் தன்னுடைய அமைதிக்கு பிறகு பெரும் செயல் ஒன்று இருந்தது என்பதை நிரூபிக்கும் விதமாக சில வாரங்களுக்கு முன்பு, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். எந்தவித அலப்பறையும் படு சிம்ப்பிளாக தனது எக்ஸ் தள பக்கத்தின் மூலம் நீண்ட அறிக்கையை வெளியிட்டார். அதனை பார்த்த அவரது ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கு சென்றனர். தங்களின் எதிர்பார்ப்பை தளபதி பூர்த்தி செய்துவிட்டதாக தெரிவித்தனர். விஜய் அரசியலில் இறங்கியிருப்பதால் இன்னும் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு சினிமாவுக்கு டாட்டா சொல்லப்போகிறார்.

எந்த மாதிரியான அரசியல்: விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தது வரவேற்பை பெற்றது போல விமர்சனத்தையும் சந்தித்திருக்கிறது. அதாவது இப்போது கட்சியை ஆரம்பித்துவிட்டு இரண்டு வருடங்களுக்கு விடுமுறை கொடுத்திருப்பது விஜய் மட்டும்தான். முக்கியமாக அவர் என்ன கொள்கையை தனது கட்சியின் பிரதானமாக எடுத்துக்கொண்டிருக்கிறார். திராவிட கட்சிகளுடன் இணக்கமாக செல்வாரா இல்லை அந்தக் கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்வாரா போன்று பல கேள்விகளை இப்போதே எழுப்ப ஆரம்பித்திருக்கின்றனர்.

செம முன்னெடுப்பு: தனது கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் விஜய் இறங்கி ரொம்ப காலம் ஆகிவிட்டது. அதில் ஒன்றாகத்தான் விஜய் கல்வி விருது விழாவை நடத்திவருகிறார். அதாவது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 10 மற்றும் 12ஆவது வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களை நேரில் அழைத்து சால்வை போர்த்தி, ஊக்கத்தொகை வழங்கும் செயலை கடந்த வருடம் முதல் செய்துவருகிறார் விஜய். அந்தவகையில் இந்த வருடமும் அதனை செய்திருக்கிறார்.

செம சாப்பாடு: சென்னை திருவான்மியூரில் இன்று அந்த விழா நடந்தது. கடந்த வருட விழாவில் இருந்த சின்ன சின்ன சொதப்பல்கள் இந்த வருட விழாவில் இல்லாத மாதிரி பார்த்துக்கொண்டது விஜய் தரப்பு. விஜய்யும் மாணவ, மாணவிகளிடையே சுருக்கமாக தனது உரையை பேசி முடித்துவிட்டு; அவர்களுக்கு சால்வையும், பரிசும் வழங்கினார். இந்நிலையில் இந்த விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு போடப்பட்ட சாப்பாடு மெனு வெளியாகியிருக்கிறது.

அதன்படி, சோறு, கதம்ப சாம்பார், வத்த குழம்பு, தக்காளி ரசம், மோர், வடை, அப்பளம், அவியல், வெற்றிலை பாயாசம், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, அவரை மணிலா பொறியல், உருளைக் கிழங்கு கார கறி, வெங்காய மணிலா உள்ளிட்டவைகள் வந்திருந்தவர்களுக்கு பரிமாறப்பட்டன. இதற்கிடையே விழாவில் கலந்துகொண்டவர்களிடம் விஜய் எந்த வித முக சுளிப்பும் இன்றி நடந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X