Gautham Menon - ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை.. ஸ்டைலிஷ் இயக்குநர் கௌதம் மேனனுக்கு பிடித்த படங்கள் தெரியுமா?
சென்னை: கோலிவுட்டின் ஸ்டைலிஷ் இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் கௌதம் மேனன். சிம்பிள் லைனை வைத்துக்கொண்டு தன்னுடைய மேக்கிங் மூலம் அதகளம் செய்பவர் அவர். இடையில் சில காரணங்களால் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருக்கிறார். தற்போது அவர் ஜோஷ்வா இமைபோல் காக்க என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அதுவும், துருவ நட்சத்திரமும் விரைவில் ரிலீஸாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் இன்று அவர் தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.
கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். அதுமட்டுமின்றி ஸ்டைலிஷ் இயக்குநர் என்ற பெயரையும் பெற்றவர் அவர். இவர் இயக்கிய காக்க காக்க, மின்னலே, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தவை. இதனால் இவருக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குநர் என்ற பெயரையும் அவர் பெற்றவர்.

ஸ்டைலிஷ் இயக்குநர்: கௌதம் மேனன் கோலிவுட்டின் ஸ்டைலிஷ் இயக்குநர் என்று பெயர் எடுத்தவர். தனது ஒவ்வொரு படத்தையும் ப்ளெசண்ட்டாக, ஹீரோவை வேறு மாதிரியான ஒரு அழகாக காண்பிக்கக்கூடியவர் அவர். காக்க காக்க, வாரணம் ஆயிரம் படம் எல்லாம் சூர்யாவுக்கு லைஃப்டைம் செட்டில்மெண்ட் படங்கள். அந்தப் படங்களில் அவரது லுக் இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரைட். அதேபோல் கமல் ஹாசன், அஜித், தனுஷ், சிம்பு ஆகியோரையும் தன்னுடைய படங்களில் படு ஸ்டைலிஷாக காட்டியிருந்தார் கௌதம்.
காதல் இயக்குநர்: ஸ்டைலிஷ்ஷாக மட்டுமின்றி தன்னுடைய திரைக்கதை, வசனம், மேக்கிங் மூலம் அசரடிப்பவர் கௌதம் மேனன். அதேபோல் காதல் ஜானர் என்றால் மனிதர் உற்சாகமாகிவிடுவார். அவர் இயக்கிய மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட காதல் ஜானர் படங்கள் உச்சத்தில் இருப்பவை. முக்கியமாக விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தை இப்போதும் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள். ஆக்ஷன் ஜானரில் அவர் படம் எடுத்தால்கூட; அதில் அவரும் லவ் போர்ஷன் தனித்து தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒதுங்கிய கௌதம்: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த கௌதம் மேனனுக்கு இடையில் சில பிரச்னைகள் வந்தன. அதனால் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் கௌதம் மேனன் ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தை இயக்கியிருக்கிறார். விரைவில் படம் வெளியாகிறது. அதேபோல் ஏற்கனவே அவர் இயக்கியிருந்த துருவ நட்சத்திரம் படமும் விரைவில் வெளியாகும் என்று நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார் கௌதம்.
பிடித்த படங்கள்: இதற்கிடையே நடிப்பிலும் பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் கடைசியாக விஜய்யுடன் லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். நடிப்பில் அவர் ஸ்கோர் செய்தாலும் இயக்கத்துக்கு மீண்டும் அவர் வர வேண்டும் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான வெந்து தணிந்தது காடு படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் இன்று தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.
பிடித்த படங்கள்: பல படங்களை இயக்கியிருக்கும் கௌதம் மேனனுக்கு பிடித்த ஐந்து படங்கள் பற்றி தெரியவந்திருக்கிறது. அதன்படி, The Godfather, Scent of Woman, Dead Poet's Society, Scent Of A Woman ஆகிய படங்கள் ஹாலிவுட்டில் ரொம்பவே அவருக்கு பிடிக்குமாம். இந்தப் படங்களை அடிக்கடி பார்த்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வாராம். மேலும் அதில் சில சீன்களை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருப்பாராம். தமிழைப் பொறுத்தவரை கமல் ஹாசன் நடித்த நாயகன், தேவர் மகன் கௌதம் மேனனுக்கு ஃபேவரைட்டாம். தேவர் மகன் படம் பார்த்து ஒரு படத்துக்கு எப்படி எழுத வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டாராம். இவை தவிர்த்து ரோஜா, அக்னி நட்சத்திரம், பம்பாய் உள்ளிட்ட படங்களும் கௌதம் மேனனுக்கு ஃபேவரைட்.


Click it and Unblock the Notifications











