வசூல் வேட்டையில் கோட்டை விட்ட GOAT.. ஆறாவது நாள் இவ்வளவுதான் கலெக்‌ஷனா?.. ரசிகர்கள் உச்சக்கட்ட ஷாக்

சென்னை: விஜய் நடிப்பில் உருவான GOAT திரைப்படம் கடந்த ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக அடியைத்தான் வாங்கியிருக்கிறது. இப்படத்துக்கு முன்னதாக விஜய் நடித்திருந்த லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய மூன்று படங்களுமே கடுமையான விமர்சனத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க படம் ரிலீஸான சில நாட்கள் வசூல் நன்றாக இருந்த சூழலில் இப்போது வசூலிலும் அடி வாங்க ஆரம்பித்திருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் GOAT. அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி என பலர் நடித்திருந்தார்கள். முதன்முறையாக வெங்கட்டும், விஜய்யும் இணைந்திருந்ததால் படத்தின் மீதான உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மட்டுமின்றி திரைத்துறையினரிடமும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

GOAT Box Office Vijay

சுமாரான வரவேற்பு: படம் வெளியான முதல் நாள் விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டனர். வெங்கட் பிரபு தங்கள் தளபதிக்கு தரமான படத்தை கொடுத்துவிட்டார் என்றும்; வில்லன் ரோலில் விஜய் பின்னி எடுத்துவிட்டார் என்றும் சிலாகித்தனர். ஆனால் பொதுவான ரசிகர்களோ படத்துக்கு சுமாரான வரவேற்பையே கொடுத்தனர். மேலும் பழைய கதையை சுமாரான திரைக்கதையுடன் வெங்கட் பிரபு கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தால் ஏமாற்றம்தான் மிச்சம் என்றும் சொன்னார்கள்.

கேமியோ படை: முக்கியமாக கதையையோ, திரைக்கதையையோ நம்பாமல்; அதற்கு உழைக்காமல் கேமியோக்களை வைத்து ஒப்பேற்றும் முறையை வெங்கட் பிரபுவும் கற்றுக்கொண்டுவிட்டார். திரிஷா, சிவகார்த்திகேயன் கேமியோ எல்லாம் ஓகேதான். அதில் காட்டிய கவனத்தை கொஞ்சம் மேக்கிங்கிலும் காட்டியிருக்கலாம். அதிலும் வெங்கட் பிரபுவின் திரைக்கதையில் ஏதாவது ஒன்று புதிதாக இருக்கும்; இதில் ஒன்றுமே இல்லையே என்று நாட்கள் செல்ல செல்ல ஓபனாகவே பேச ஆரம்பித்தார்கள் ரசிகர்கள்.

வெற்றி கொண்டாட்டம்: அதேசமயம் விஜய் மீது தொடர்ந்து வன்மத்தை கக்குபவர்கள் கக்கிக்கொண்டே இருப்பார்கள். அதன் வெளிப்பாடுதான் இது. தங்களுக்கு படம் ரொம்பவே பிடித்துவிட்டது என்று விஜய் ரசிகர்கள் ஒருபக்கம் முஷ்டி முறுக்குகிறார்கள். மேலும் படக்குழுவும் சமீபத்தில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. விமர்சன ரீதியாக GOAT படம் பலத்த சேதாரம் அடைந்தாலும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

வசூல் விவரம்: அதாவது முதல் நாளே உலக அளவில் 126 கோடி ரூபாய் வசூலித்ததாக போஸ்டர் வெளியிட்டது படக்குழு. படம் வெளியாகி நான்கே நாட்களில் 288 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாகவும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அதேசமயம் கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் படத்துக்கு வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை என்றும் மறுபக்கம் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

சரிந்த வசூல்: ஆரம்பத்தில் சில நாட்கள் வசூல் வேட்டையை GOAT நடத்தினாலும் கடந்த இரண்டு நாட்களாகவே வசூலில் டல் அடித்திருக்கிறதாம். அதாவது ஐந்தாவது நாளான கடந்த 9ஆம் தேதி 14 கோடி ரூபாயை வசூலித்த படம்; ஆறாவது நாளான நேற்று 10 கோடி ரூபாய்வரை மட்டுமே வசூலித்திருப்பதாகவும்; மொத்தம் 315 கோடி ரூபாய்வரைதான் கலெக்‌ஷன் செய்திருக்கிறது; இன்னும் சில நாட்களில் வசூல் மேற்கொண்டு குறையலாம் என்று பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X