Jailer World Wide Box Office - ஜெயிலர் வசூல்.. வெளிநாடுகளில் செய்த சாதனை தெரியுமா?
சென்னை: Jailer World Wide Box Office (ஜெயிலர் வசூல்) ஜெயிலர் படம் வெளிநாடுகளில் செய்த வசூல் குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படமானது நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. மலையாளத்திலிருந்து மோகன் லால், தெலுங்கிலிருந்து சுனில், கன்னடத்திலிருந்து சிவராஜ் குமார், ஹிந்தியிலிருந்து ஜாக்கி ஷெராஃப் என பான் இந்தியா ஸ்டார்கள் இதில் களமிறங்கியிருக்கின்றனர். இவர்கள் தவிர வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் தமன்னா, விநாயகன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்

படத்துக்கு ரெஸ்பான்ஸ்: பீஸ்ட்டில் விட்டதை இதில் நெல்சன் திலீப்குமார் பிடித்துவிட்டார் என்றும்; பல வருடங்களுக்கு பிறகு தலைவர் ரஜினிக்கு தரமான கம்பேக்காக அமைந்திருக்கிறது. நெல்சன் திலீப்குமார் ரஜினிகாந்த்தை அவ்வளவு க்ளாஸாக, மாஸாக காட்சிப்படுத்தியிருக்கிறார் என்றும்; இடைவேளை காட்சி எல்லாம் உச்சக்கட்ட மாஸ் எனவும் ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கூறிவருகின்றனர்.
இரண்டாம் பாதி: அதேபோல் முதல் பாதி கொஞ்ச நேரம் ஸ்லோவாக போனாலும் சிறிது நேரத்திலேயே பிக்கப் ஆகிவிடுகிறது. அந்த மொமண்ட்டத்தை இரண்டாம் பாதியிலும் நெல்சன் தொடர செய்திருப்பது பார்ப்பதற்கே அருமையாக இருக்கிறது. அதிலும் ரஜினிக்கான ப்ளாஷ்பேக் காட்சியில் அவரை பார்க்கும்போது மூன்றுமுகம் ரஜினிகாந்த் நியாபகத்தில் வருகிறார் என சிலாகிக்கின்றனர்.
படத்தின் வசூல்: முதல் நாளின் முதல் காட்சியிலேயே பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகம் தென்பட்டதன் காரணமாக அடுத்தடுத்த காட்சிகளுக்கும் திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் முதல் நாளிலேயே ஜெயிலர் வசூலில் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இந்தியாவில் மட்டும் மொத்தம் 49 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

வெளிநாடுகளில் வசூல்: இந்நிலையில் வெளிநாடுகளிலும் ஜெயிலரின் வசூல் திருப்திகரமானதாகவே இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் 1.45 மில்லியன் அமெரிக்க டாலர்களை படம் வசூலித்திருக்கிறதாம். இந்திய ரூபாய் மதிப்பின்படி 12 கோடி ரூபாய் ஆகும். முன்னதாக அமெரிக்காவில் பீஸ்ட் திரைப்படம் 1.37 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்திருந்தது. ஜெயிலர் தற்போது அந்த ரெக்கார்டை உடைத்திருக்கிறது.
அதேபோல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் பொன்னியின் செல்வன் 2வுக்கு பிறகு அதிக வசூல் செய்த தமிழ் படமாக ஜெயிலர் தற்போது இருக்கிறது. வார இறுதி என்பதால் இன்று, நாளை, நாளை மறுநாளில் மேற்கொண்டு வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











