திணறி திணறி 100 கோடி க்ளப்பில் சேர்ந்த கங்குவா.. என்னங்க இது சூர்யாவுக்கு வந்த சோதனை

சென்னை: கங்குவா திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியானது. மிகப்பெரிய ஹைப்போடு ரிலீஸான கங்குவா கடுமையாக அடி வாங்கியது. முக்கியமாக சூர்யா, ஜோதிகா, ஞானவேல் ராஜா ஆகிய மூன்று பேரையும் ரசிகர்கள் வைத்து செய்துவிட்டனர். விமர்சன ரீதியாக படம் ஒருபக்கம் பெரும் விமர்சனத்தை சந்தித்த சூழலில் வசூல் ரீதியாகவும் படம் அதள பாதாளத்தில் விழுந்தது. 2,000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று தயாரிப்பாளர் கூறிய நிலையில் படம் 150 கோடி ரூபாயை வசூலிப்பதே பெரும்பாடாக இருக்கிறது.

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் கங்குவா. கடந்த 14ஆம் தேதி படமானது வெளியானது. படம் வெளியாவதற்கு முன்னதாக ப்ரோமோஷன்களில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இந்தப் படம் கண்டிப்பாக 2,000 கோடி ரூபாயை வசூலிக்கும். அதற்கான ஆதாரத்தை நான் எக்ஸ் தளத்தில் வெளியிடுவேன் என்றார். அதுமட்டுமின்றி படத்தின் முதல் பாகத்தை பார்த்த பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கு போட்டியாக யாரும் படத்தை ரிலீஸ் செய்யமாட்டார்கள் என்றெல்லாம் பேசினார்.

suriya kanguva

வாயை பிளந்த ரசிகர்கள்: அதேபோல் சூர்யாவும் ஒரு ப்ரோமோஷனில் பேசியபோது, 'கங்குவா படத்தை பார்க்கும்போது இந்திய திரையுலமே இப்படி ஒரு படத்தை தமிழில் எடுக்க முடியுமா என்று வாயை பிளந்து பார்ப்பார்கள்' என்று கூறினார். இப்படி ஆளாளுக்கு ஹைப் ஏற்ற; படத்தை பார்த்த ரசிகர்கள் கழுவி ஊற்றிவிட்டார்கள். இந்தப் படத்துக்குத்தான் இவ்வளவு ஹைப்பா; படத்தில் ஒன்றுமே இல்லையே என்றெல்லாம் அடித்து துவைத்தனர். இதன் காரணமாக படக்குழு உச்சக்கட்ட அப்செட் அடைந்தது.

ஜோதிகா ஆதரவு: நெகட்டிவ் விமர்சனங்கள் ஓவராக வந்துகொண்டிருந்த சூழலில் நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'கங்குவா படத்துக்கு வேண்டுமென்றே நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புகின்றனர். படத்தில் உள்ள நல்ல விஷயங்களை எல்லாம் மறந்துவிட்டார்கள்' என்று காட்டமாக தெரிவித்திருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்களோ ஜோதிகாவையும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெருகும் ஆதரவு: சூழல் இப்படி இருக்க இயக்குநர் சுசீந்திரன் கங்குவா படத்துக்கு தனது ஆதரவை தெரிவித்தார். அதேபோல் விமர்சகர்களால்தான் கங்குவா படம் இப்படிப்பட்ட மோசமான விமர்சனத்தை சந்தித்திருப்பதாக திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்டோரும் தெரிவித்தனர். ஆனால் வேண்டுமென்றே கங்குவாவுக்கு விமர்சனம் வைக்கவில்லை; விமர்சகர்களை பொறுத்தவரை படம் நன்றாக இருந்தால்தான் பாசிட்டிவ் விமர்சனம் கிடைக்கும் என்று விமர்சகர்கள் தரப்பு குரலாக இருக்கிறது.

வசூல் நிலவரம்: சூழல் இப்படி இருக்க கங்குவா திரைப்படம் வெளியாகி 11 நாட்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி நேற்று மட்டும் அந்தப் படம் தமிழ்நாட்டில் 90 லட்சம் ரூபாயும், இந்திய அளவில் 78 கோடி ரூபாயும் வசூலித்திருப்பதகாவும்; உலகளவில் 101 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக Sacnilk வலைதளம் கூறியிருக்கிறது. இதனால் இந்தப் படம் 150 கோடி ரூபாயை தொடுவதே பெரும் பாடாக இருக்கும் என்று பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. அதேசமயம் படம் 137 கோடி ரூபாய் வசூலை உலகளவில் வசூலித்துவிட்டதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X