Kavin - எவ்வளவு பெரிய மனசு பாருங்க.. நண்பருக்கு உதவும் கவின்.. வேற லெவல் என ரசிகர்கள் புகழாரம்

சென்னை: கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. கவினின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. அதன் காரணமாக கவினுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்துவருகின்றன. சூழல் இப்படி இருக்க கவினின் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் கவினுக்கு தங்களது பாராட்டை பலமாகவே கொடுத்துவருகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் கவின். சிவகார்த்திகேயன் போல் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவினுக்கு சினிமாவில் எந்த திருப்புமுனையும் ஏற்படாமல் இருந்தது. இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். அங்கிருந்து வெளியே வந்த பிறகு லிஃப்ட் என்ற படத்தில் நடித்தார். விமர்சன ரீதியாக படம் ரசிக்கப்பட்டாலும் கவினுக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த பெயரும் கிடைக்கவில்லை.

Here are the Details about Kavin Next Movie

டாடா திருப்புமுனை: இந்தச் சூழலில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் டாடா என்ற படத்தில் நடித்தார் கவின். அவருக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமான அபர்ணா தாஸ் நடித்திருந்தார் . ஒரு கல்லூரி மாணவன் குழந்தைக்கு தந்தையாகும் சூழலை ஒன்லைனாக வைத்துக்கொண்டு படம் உருவாகியிருந்தது.கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக கவினின் நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது.

திருமணம்: இதற்கிடையே பிக்பாஸில் கலந்துகொண்டபோது சக போட்டியாளரான லாஸ்லியாவை அவர் காதலித்ததாக கூறப்பட்டது. ஆனால் அதுகுறித்து இரண்டு பேரும் மௌனமே காத்து வந்தனர். இந்தச் சூழலில் கவினுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மோனிகா டேவிட் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணத்தில் நெல்சன் திலீப்குமார், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கவினின் புதிய படம்: இந்த சூழலில் கவின் ஸ்டார் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கியிருக்கிறார். இதில் கவினுடன் லால், அதிதி போகாங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். முழுக்க முழுக்க கல்லூரி மற்றும் இளைஞர்களை மையப்படுத்தி படம் உருவாகிவருவதாக தெரிகிறது.

ஃபர்ஸ்ட் சிங்கிள்: படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தில் இடம்பெற்றிருக்கும் காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற சிங்கிள் வீடியோ சமீபத்தில் வெளியானது. பாடலை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். பாடல் விண்டேஜ் ஸ்டைலில் உருவாகியிருந்தது. மேலும் கவின்90கள் கெட் அப்பில் தோன்றியதும் குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக டாடா படம் போலவே இந்தப் படமும் கவினுக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கும் என்ற எதிர்பார்ப்பு திரைத்துறையில் அதிகம் எழுந்திருக்கிறது.

அடுத்த படம்: மேலும் வெற்றிமாறன் தயாரிப்பிலோ அல்லது அவர் எழுதிய கதையிலோ கவின் நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி படிப்படியாக வளர்ந்துகொண்டிருக்கும் கவின் தனது நண்பர் ஒருவருக்காகவும் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. நெல்சன் திலீப்குமாரிடம் கவினின் நண்பர் ஒருவர் உதவி இயக்குநராக இருக்கிறாராம். அவரை தனது நடிப்பில் இயக்குநராக அறிமுகம் செய்வதற்கு கவின் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X