ஸ்டார் படத்தின் இரண்டாவது நாள் வசூல்.. கவினுக்கு அடித்தது ஜாக்பாட்.. பாக்ஸ் ஆபிஸ் ஸ்டார் ஆகிட்டாரோ
சென்னை: கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. கவினின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. இதனையடுத்து இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்திருக்கிறார் கவின். படமானது மே 10ஆம் தேதி ரிலீஸானது. முதல் நாள் படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தை கொடுத்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சூழல் இப்படி இருக்க படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் கவின். சிவகார்த்திகேயன் போல் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவினுக்கு சினிமாவில் எந்த திருப்புமுனையும் ஏற்படாமல் இருந்தது. இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். அங்கிருந்து வெளியே வந்த பிறகு லிஃப்ட் என்ற படத்தில் நடித்தார். விமர்சன ரீதியாக படம் ரசிக்கப்பட்டாலும் கவினுக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த பெயரும் கிடைக்கவில்லை.

டாடா திருப்புமுனை: இந்தச் சூழலில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் டாடா என்ற படத்தில் நடித்தார் கவின். அவருக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமான அபர்ணா தாஸ் நடித்திருந்தார் . ஒரு கல்லூரி மாணவன் குழந்தைக்கு தந்தையாகும் உருவாகும் சூழலை ஒன்லைனாக வைத்துக்கொண்டு படம் உருவாகியிருந்தது.கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக கவினின் நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது.
ஸ்டார்: இந்த சூழலில் கவின் ஸ்டார் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கியிருக்கிறார். இதில் கவினுடன் லால், அதிதி போகாங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கடந்த 10ஆம் தேதி ஸ்டார் திரைப்படம் வெளியானது. பியேர் பிரேமா காதல் படத்தின் மூலம் இளன் ஏற்கனவே கவனம் ஈர்த்திருந்ததால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருந்தது.
கலவையான் விமர்சனம்: ரசிகர்களுக்கு ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்பை படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்று ஒருதரப்பினர் கூறினாலும்; மறுதரப்பினர் படத்தில் கவினின் நடிப்பு அட்டகாசமாக இருக்கிறது. படத்தின் திரைக்கதையும் அவ்வளவும் ஒன்றும் மொக்கை இல்லை என்று கூறி தங்களது பாசிட்டிவ் ரிவ்யூவை கொடுத்தனர். இதனால் படத்துக்கு கலவையான விமர்சனத்தை பெற்றுவருகிறது.
வசூல் நிலவரம்: படத்தின் வசூலை பொறுத்தவரை முதல் நாளில் ஸ்டார் படம் இரண்டு கோடியே 70 லட்சம் ரூபாய்வரை வசூலித்தது. தனது மூன்றாவது படத்திலேயே டீசன்ட்டான வசூலை கவின் பெற்றிருப்பதால் கண்டிப்பாக அவர் இனி ரைசிங் ஸ்டார் ரேஸில் முன்னணியில் இருப்பார் என்று திரைத்துறையினர் ஆரூடம் கூறுகின்றனர். சூழல் இப்படி இருக்க இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
அதன்படி நேற்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கண்டிப்பாக படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே வசூலும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில் இரண்டாவது நாளான நேற்று கிட்டத்தட்ட மூன்று கோடியே 80 லட்சம் ரூபாய்வரை வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றும் விடுமுறை நாள் என்பதால் கண்டிப்பாக வசூல் அதிகமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











