ரஜினிகாந்த்தின் கூலி.. லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. அய்யோ எங்கேயோ போய்ட்டாரே

சென்னை: கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக லோகேஷ் கனகராஜ் திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவரது இயக்கத்தில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. குறிப்பாக லோகேஷ் கனகராஜை கடுமையாக விமர்சனம் செய்தனர் ரசிகர்கள். சூழல் இப்படி இருக்க அடுத்ததாக ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கவிருக்கிறார். இந்தச் சூழலில் கூலி படத்துக்கு லோகேஷ் கனகராஜ் வாங்கியிருப்பதாக ஒரு சம்பள தொகை சொல்லப்படுகிறது.

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்திலேயே தன்னை ஒரு நல்ல இயக்குநர் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். அந்தப் படத்தை பார்த்த பலரும் கண்டிப்பாக இந்த இயக்குநர் பெரிய ஆளாக வருவார் என்று கணிக்க ஆரம்பித்தனர். அந்த கணிப்பை சரியாக்கும் விதமாக அமைந்தது அவரது இரண்டாவது படமான கைதி. கார்த்தி ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆகி ஒரே இரவில் லோகேஷின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றது.

Here are the Details about Lokesh Kanagaraj Salary For Coolie Movie

முன்னணி ஹீரோக்களுடன்: இதனையடுத்து விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர் என்ற பெயரை பெற்றார் லோகேஷ். தொடர்ந்து தனது ரோல்மாடலான கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். விமர்சன ரீதியாக ஒரு தரப்பிடம் அந்தப் படம் அடி வாங்கினாலும் பெரும்பாலானோரிடத்தில் படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. 400 கோடி ரூபாய்வரை வசூலித்து இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநராக லோகேஷை மாற்றியது.

முதல் சறுக்கல்: இப்படி வரிசையாக ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருந்த லோகேஷுக்கு முதல் சறுக்கலாக லியோ திரைப்படம் வெளியானது. கடந்த வருடம் வெளியான அந்தப் படம் தோல்வியையே சந்தித்தது. பிளாஷ்பேக் விவகாரம், மனிதர்களை பலி கொடுக்கும் காட்சி விவகாரம், திரைக்கதை என பல விஷயங்கள் லோகேஷுக்கு எதிராக திரும்பின. முக்கியமாக பிளாஷ்பேக் விஷயம் லோகேஷை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. வசூல் ரீதியாக படம் ஓகேதான் என்றாலும் விமர்சன ரீதியாக படுத்துவிட்டது.

எல்சியூ: முக்கியமாக லோகேஷ் கனகராஜின் பலங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது எல்சியூ. லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் என்ற கான்செப்ட் விக்ரம் படத்தில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருந்தது. ஆனால் லியோ திரைப்படத்தில் எடுபடவில்லை. மேலும் வேண்டுமென்றே இதில் எல்சியூவை லோகேஷ் திணித்திருக்கிறார் என்ற விமர்சனம்தான் மிஞ்சியது. இப்படி லியோவில் அவர் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தாலும் அவருக்கான டிமாண்ட் குறையவில்லை. அடுத்ததாக ரஜினிகாந்த்தை வைத்து இயக்குகிறார்.

கூலி: லியோவில் சந்தித்த விமர்சனத்தை அடுத்த படமான கூலி படத்தில் சரிக்கட்ட தயாராக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ரஜினிகாந்த்தை வைத்து அந்தப் படத்தை இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் டைட்டில் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முக்கியமாக அந்த டீசரில் கண்ணதாசனின் வரிகளை யூஸ் செய்தது, செண்பகமே செண்பகமே பாடலை ரஜினியை விசில் செய்ய வைத்தது என்று லோகேஷ் வித்தியாசமாக ரஜினியை காட்சிப்படுத்தியிருந்தார்.

சம்பளம்: இதன் காரணமாக கண்டிப்பாக இதுவரை பார்க்காத ரஜினியை கூலி படத்தில் பார்க்கலாம் என்ற ஆவலில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்தச் சூழலில் கூலி படத்துக்கு லோகேஷ் கனகராஜ் வாங்கியிருப்பதாக ஒரு சம்பள தொகை சொல்லப்படுகிறது. அதன்படி இந்தப் படத்துக்காக லோகேஷ் கனகராஜ் 60 கோடி ரூபாய்வரை சம்பளமாக பெற்றிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநராக லோகேஷ் மாறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X