நாக சைதன்யா - சோபிதா திருமணம் நடக்கும் இடம் எது தெரியுமா?.. அதுக்குள்ள மாறிடுச்சே பாஸ்
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் நாகார்ஜுனா. இவரது மகன் நாக சைதன்யாவும் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்துகொண்ட அவர்; சில வருடங்களுக்கு முன்பு அவரை விவாகரத்து செய்தார். சூழல் இப்படி இருக்க நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்யவிருக்கிறார்.
தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய குடும்பங்களில் ஒன்று நாகார்ஜுனாவின் குடும்பம். அவர் நடிகை அமலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். நாகார்ஜுனாவை போலவே அவரது மகன் நாக சைதன்யாவும் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். 2009ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமான நாக சைதன்யா கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படத்தில் நடித்தார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் தண்டெல் படம் வெளியாகவிருக்கிறது.

திருமணம்: இதற்கிடையே விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது சமந்தாவை காதலிக்க ஆரம்பித்தார் சைதன்யா. அவர்களது காதலுக்கு இருவீட்டாரின் சம்மதம் கிடைத்ததை அடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு இருவரும் கோவாவில் திருமணம் செய்துகொண்டனர். தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா தெலுங்கு தேசத்தில் பெரிய வீட்டு மருமகளாக மாறினார்.
தொடர்ந்து சினிமாவில்: திருமணத்துக்கு பிறகும் சமந்தா சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதற்கு நாக சைதன்யாவும் முழு சப்போர்ட்டாக இருந்தார். அதேசமயம் சமந்தா சினிமாவில் நடிப்பதை நாகார்ஜுனாவும், அமலாவும் விரும்பவில்லை என்றும் ஒரு தகவல் அரசல் புரசலாக ஓடியது. இருந்தாலும் சமந்தா முழுக்க முழுக்க சினிமாவில் கவனம் செலுத்திக்கொண்டே இருந்தார்.
பிரிவு: நிலைமை இப்படி இருக்க கடந்த 2021ஆம் ஆண்டு நாக சைதன்யாவும் - சமந்தாவும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். அதற்கு காரணம் சமந்தா நடித்ததுதான் என்று இன்றளவும் பேச்சு இருக்கிறது. ஆனால் சைதன்யாவோ, சமந்தாவோ அதற்கான காரணத்தை வெளியே சொல்லவில்லை. விவாகரத்துக்கு பிறகும் சமந்தாவின் கரியர் பீக்கில்தான் சென்றுகொண்டிருந்தது. ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்தது. அதிலிருந்து இப்போது மீண்டிருக்கும் அவர் மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருக்கிறார்.
நிச்சயதார்த்தம்: சமந்தாவை பிரிந்த பிறகு நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் காதலித்துவந்தனர். அவர்களுக்கான நிச்சயதார்த்தம் அண்மையில் சிம்ப்பிளாக நடந்து முடிந்தது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாகார்ஜுனா வெளியிட்டார். மேலும் இருவரும் திருமணம் செய்துகொள்வதில் உறுதியாகவே இருக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் விரைவாக நிச்சயதார்த்தத்தை முடித்தோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
எங்கு திருமணம்: அதேசமயம் திருமண தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்திருந்தார் நாகார்ஜுனா. சூழல் இப்படி இருக்க அவர்களது திருமணம் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இவர்களது திருமணம் ராஜஸ்தானில் பிரமாண்டமாக நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ராஜஸ்தானில் வைக்க சோபிதா ரொம்பவே விருப்பப்பட்டதாகவும் அதன் காரணமாகத்தான் திருமணம் நடக்கும் இடம் ஹைதராபாத்திலிருந்து ராஜஸ்தானுக்கு மாறியிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











