ஜாம் ஜாம்னு கல்யாணம்.. அமெரிக்காவில் நெப்போலியனின் சொத்து மதிப்பு இவ்வளவா?
சென்னை: நெப்போலியனின் மூத்த மகனான தனுஷுக்கு சில நாட்களுக்கு முன்புதான் ஜப்பானில் ஜாம் ஜாம் என்று திருமணம் நடந்து முடிந்தது. அமெரிக்காவில் திருமணத்தை நடத்தினால் சில பிரச்னைகள் வரும் என்பதால் ஜப்பானில் இத்திருமணம் நடத்தப்பட்டது. மணமக்களுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவரும் சூழலில்; அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியனின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
பாரதிராஜாவின் இயக்கத்தில் சினிமாவில் அறிமுகமான நெப்போலியன் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். ஹீரோ, வில்லன் என நடித்த அவர் அரசியல்வாதியாகவும் இருந்தவர். மத்திய அமைச்சராக பதவி வகித்த அவர்; இப்போது பாஜகவில் ஐக்கியமாகியிருக்கிறார். தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேரு நெப்போலியனின் நெருங்கிய உறவினர் என்ற பேச்சும் உண்டு. ஒருகட்டத்தில் தனது மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருந்தது நெப்போலியனுக்கு தெரியவந்தது.

அமெரிக்காவில் செட்டில்: அதனையடுத்து இந்தியாவிலிருந்து வெளியேறிய அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு தனுஷ் தவிர்த்து குணால் என்ற மகனும் இருக்கிறார். தனுஷின் தசை சிதைவு நோய்க்கு இந்தியாவில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காததால் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். அங்கு தனுஷுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஓரளவுக்கு பலன் அளித்தது. அங்கு நெப்போலியன் அமெரிக்க குடியுரிமையையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மகனுக்கு திருமணம்: தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த நெப்போலியன்; அக்ஷயா என்ற நடுத்தர வர்க்கத்து பெண்ணை பார்த்தார். அக்ஷயாவும் இத்திருமணத்துக்கு முழு சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து நிச்சயதார்த்தம் முடிந்தது. பிறகு ஜப்பானில் சில நாட்களுக்கு முன்பு தனுஷ் - அக்ஷயா திருமணம் நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டிலிருந்து திரையுலகத்தை சேர்ந்த சில முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். ஆனால் அரசியல் பிரமுகர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.
மீண்டும் திருமணம்: அமெரிக்காவில் திருமணத்தை நடத்தினால் சில சட்ட சிக்கல்கள் வரும் என்பதால்தான் ஜப்பானில் திருமணம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இன்னும் ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் அமெரிக்காவில் தனுஷ் - அக்ஷயா திருமணம் நடத்தப்படும் என்று சமீபத்திய பேட்டியின்போது நெப்போலியன் கூறியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க நெப்போலியனுக்கு அமெரிக்காவில் இருக்கும் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
நெப்போலியனின் சொத்து: அதன்படி அமெரிக்காவில் அவர் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியை நடத்திவருகிறார். அதற்கு CEOவாக தனுஷ்தான் இருக்கிறார். அக்கம்பெனியில் இந்தியர்கள்தான் பெரும்பான்மையானவர்களாக வேலை செய்கிறார்களாம். அந்த நிறுவனத்தின் மூலம் வருமானம் நெப்போலியனுக்கு கொட்டுவதாகவும் ஒரு பேச்சு உண்டு. சாஃப்ட்வேர் நிறுவனம் மட்டுமின்றி கிட்டத்தட்ட 2000 ஏக்கர் பரப்பளவில் அமெரிக்காவில் விவசாயமும் செய்துவருகிறார். அங்கு காய்கறிகளை விளைவிக்கும் அவர்; தங்களது நிறுவனத்தார்களுக்கு கொடுக்கும் வழக்கத்தையும் வைத்திருக்கிறார்.
மொத்த மதிப்பு: அதேபோல் அவரிடம் டெஸ்லா, பென்ஸ் உள்ளிட்ட சொகுசு கார்கள் இருக்கின்றன. மேலும் தனுஷுக்கு வசதியாக லிஃப்ட் வசதி, நீச்சல் குளம், வீட்டுக்குள்ளேயே தியேட்டர் என சகல வசதிகளும் இருக்கின்றன. அவர் வசிக்கும் வீடு மட்டுமே இந்திய ரூபாய் மதிப்பில் பல கோடி ரூபாய் தகும் என்றும் கூறப்படுகிறது. மொத்தமாக அவரிடம் ஏறத்தாழ 1000 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து மதிப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக மகனின் திருமணத்துக்காக 20 கோடி ரூபாய்வரை அவர் செலவு செய்ததாக ஒரு தகவல் ஓடியது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











