நெப்போலியன் மகனுக்கு திருமணம்.. அழைப்பிதழை பார்த்தீங்களா.. செமயா இருக்கே

சென்னை: நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் பெயர் பெற்ற ஹீரோவாக வலம் வந்தவர். நடிகராக மட்டுமின்றி அரசியலில் நுழைந்து மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். சூழல் இப்படி இருக்க தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சினிமா, அரசியலிலிருந்து ஒதுங்கி அமெரிக்காவில் தற்போது செட்டில் ஆகிவிட்டார். சூழல் இப்படி இருக்க அவரது மூத்த மகன் தனுஷுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.

குமரேசன் என்ற இயற்பெயரை கொண்ட நெப்போலியன் திருச்சியை பூர்வீகமாகக் கொண்டவர். கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு சினிமா ஆசை துளிர்விட முதல் படமே பாரதிராஜாவின் இயக்கத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன்படி கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அவருக்கு நெப்போலியன் என்று பெயர் வைத்தது பாரதிராஜாதான் என்பது கவனிக்கத்தக்கது.

Napolean Dhanush

இன்னொரு உதாரணம்: பாரதிராஜாவின் அறிமுகம் என்றாலே யாரும் சோடை போனதில்லை என்பதற்கான இன்னொரு உதாரணம்தான் நெப்போலியன். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டிய அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தனது சாமானியத்தனமான குரலாலும், அழகாலும் ரசிகர்களை ஈர்த்தார்.

பல படங்கள்: 1991ஆம் ஆண்டு அறிமுகமான நெப்போலியனுக்கு அடுத்த வருடமான 1992ஆம் ஆண்டு ஜோராக அமைந்தது. அந்த வருடத்தில் மட்டும் சின்னத்தாயி, பரதன், நாடோடி தென்றல், ஊர் மரியாதை, இது நம்ம பூமி, முதல் சீதனம், தலைவாசல், பங்காளி, அபிராமி என மொத்தம் 9 படங்கள் நடித்து படு பிஸியாக வலம் வந்தார். அது மற்ற நடிகர்களை ஆச்சரியப்படுத்தியது என்பதுதான் உண்மை. தொடர்ந்து எஜமான், கிழக்கு சீமையிலே உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

அமெரிக்காவில் செட்டில்: சினிமாவில் மட்டுமின்றி அரசியலில் நுழைந்து மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். ஒருகட்டத்தில் தனது மகனுக்கு தசை சிதைவு நோய் வர இந்தியாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு தனது மகனுக்கு சிகிச்சை அளித்து அவருக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்துகொடுத்திருக்கிறார். அவ்வப்போது இந்தியா வரும் அவர் சில படங்களில் மட்டும் நடித்திருக்கிறார்.

தனுஷ் திருமணம்: மகன் தனுஷ் மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருப்பவர் நெப்போலியன். இந்தச் சூழலில் அவரது மூத்த மகன் தனுஷுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. அவருக்கு திருநெல்வேலியில் பெண் எடுத்திருக்கிறார்கள். இவர்களது திருமணம் ஜப்பானில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் தனுஷின் திருமண அழைப்பிதழ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அவரது திருமண அழைப்பிதழ் பழங்கால ஓலைச்சுவடி வடிவில் புதுமையாக இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X