நடன புயலுக்கு பிறந்தநாள்.. பிரபுதேவாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. இவ்வளவா?
சென்னை: பிரபுதேவா இந்தியாவில் புகழ் பெற்ற நடன அமைப்பாளர்களில் ஒருவர். அதுமட்டுமின்றி பல படங்களில் ஹீரோவாக நடித்து அப்ளாஸை அள்ளிய அவர் வெற்றிகரமான இயக்குநர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். அவர் தமிழில் இயக்கிய போக்கிரி திரைப்படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. தற்போது விஜய்யுடன் GOAT படத்தில் நடித்துவருகிறார் பிரபுதேவா. அவர் இன்று தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்தச் சூழலில் அவரது சொத்து மதிப்பு குறித்து சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் சிறந்த நடன அமைப்பாளர் பிரபுதேவாவின் கோரியோகிராஃபியயில் அனைத்து நடிகர்களுமே சிறப்பான நடனத்தை வெளிப்படுத்துவார்கள். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைத்தார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மீனா; இருப்பதிலேயே ரொம்பவும் கடினமான கோரியகிராஃபர் என்றால் அது பிரபுதேவாதான் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. நடன அமைப்பாளராக மட்டுமின்றி பிரபுதேவா நடிகராகவும் புகழ் பெற்றவர். காதலன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரபுதேவா தொடர்ந்து ராசைய்யா, விஐபி, மின்சாரக்கனவு, டைம் என ஏராளமான படங்கள் நடித்தார்.

காதல் கொண்டேன்: அந்தப் படங்களும் ஹிட்டாகின. இதனால் 90களில் முன்னணி நடிகர்கள் வரிசையில் பிரபுதேவா இருந்தார். மேலும் காதல் கொண்டேன் படத்துக்கு ஹீரோவாக நடிக்க முதலில் செல்வராகவன் பிரபுதேவாவைத்தான் அணுகினார் என்பது நினைவுக்கூரத்தக்கது. பிரபுதேவா கடைசியாக பகீரா படத்தில் நடித்திருந்தார். படம் படுதோல்வியை சந்தித்தது.
டைரக்டர் பிரபுதேவா: நடிகர், நடன அமைப்பாளராக கலக்கிவந்த பிரபுதேவா 2005ஆம் ஆண்டு இயக்குநராகவும் அறிமுகமானார். அவர் தெலுங்கில் இயக்கிய முதல் படம்தான் தமிழில் சம்திங் சம்திங் படமாக ரீமேக்காகியது. அதனையடுத்து தமிழில் போக்கிரி, வில்லு, வெடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் ஹிந்தியில் வாண்டட் (போக்கிரி ரீமேக்), ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா, தபாங் 3 உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.
சர்ச்சைகள்: பிரபுதேவாவை சுற்றி சர்ச்சைகளும் வட்டமடித்தன. தன்னுடன் நடனம் ஆடிய ரமலத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதற்கிடையே நயன்தாராவை காதலித்தார். பிரபுதேவாவுக்காக நயன் மதம் மாறவும் செய்தார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை இருவரின் காதலும் பிரேக் அப்பில் முடிந்தது. இதனையடுத்து அவர் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் பெண் குழந்தை பிறந்தாள்.
சொத்து மதிப்பு: பிரபுதேவா இன்று தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்தச் சூழலில் பிரபுதேவாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு கிட்டத்தட்ட 100லிருந்து 150 கோடி ரூபாய்வரை சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களில் சொகுசு வீடுகளும் இருக்கின்றன. இதற்கிடையே, பிரபுதேவா நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி மனோஜ் என்.எஸ்.இயக்க பிரபுதேவாவுடன் யோகிபாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோரும் நடிக்க கமிட்டாகியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











