பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பும் பிரேமலு.. எவ்வளவு வசூல் தெரியுமா?

திருவனந்தபுரம்: "தண்ணீர் மாத்தன் தினங்கள்" மற்றும் "சூப்பர் சரண்யா" போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குனர் கிரிஷ் ஏ.டி. இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பிரேமலு. இந்த படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் இயக்குநர் கிரிஷ். ரொமாண்ட்டிக் காமெடி ஜானரில் உருவாகி உள்ள இந்த மலையாளத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் கிரிஷ் ஏ.டி. இவர் வெற்றிப் படங்களை இயக்கியிருக்கிறார். இந்தச் சூழலில் அவரது இயக்கத்தில் நஸ்லென் கே. கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் பிரேமலு. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே சமீபத்தில் படமானது வெளியானது. கிரிஷ் ஏ.டி.யின் திறமையான இயக்கம் இந்த படத்தை நகைச்சுவையையும், எமோஷனல் கலந்த படமாகவும் ஒரு தரமான சினிமா அனுபவத்தை தருகிறது.

Here are the details about Premalu Box Office Report

நல்ல ரெஸ்பான்ஸ்: படத்துக்கு ரசிகர்கள் தங்களது வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். படத்தில் எளிமையான அதேசமயம் வசீகரிக்கும் கதைக்களமும் அதேசமயம் நகைச்சுவையுடன் நல்ல காதல் கதையும் இருப்பது வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. நஸ்லென் கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோருக்கு இடையில் நடக்கும் அழகான காதல் ரசிகர்களுக்கு புதுவித சினிமா அனுபவத்தையும், அதே சமயம் பல இடங்களில் சிரிப்பையும் வர வைக்கிறது.

கைத்தட்டல் பெறும் நஸ்லன்: தனது லட்சியங்களுக்கும் எதிர்பாராத காதலுக்கும் இடையில் சிக்கி தவிக்கும் ரீனுவாக மமிதா பைஜூவின் கதாபாத்திரம் கவனத்தை பெறுகிறது. இதனுடன், நஸ்லன் கஃபூர் சச்சினாக நிறைய இடங்களில் கைதட்டல்களை பெறுகிறார். அவரது கதாபாத்திரம் இயல்பான, அதே சமயம் அழகையும் அப்பாவித்தனத்தையும் கொண்டிருந்ததாக ரசிகர்கள் கூறி தங்களது குட் ரெஸ்பான்ஸை கொடுத்திருக்கிறார்கள்.

கூடுதல் பலம்: சங்கீத் பிரதாப்பின் அமல் டேவிஸன் கதாபாத்திரம் கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. கிரிஷ் ஏ.டி.யின் இயக்கத்தில் உருவாகி இயக்கும் இந்த பிரேமலு மலையாள சினிமாவில் வெளியாகி உள்ள மற்றொரு சிறந்த படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக இந்தப் படம் "பிரேமம்" மற்றும் "லவ் டுடே" போன்ற சிறந்த ரொமாண்ட்டிக் காமெடி ஜானர் படங்களுக்கு போட்டியாக உள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றார்கள்.

பாக்ஸ் ஆபிஸ்: கேரளாவில் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும் பரவலான வசூலை மேலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது. இந்தப் படமானது உலக அளவில் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. "பிரேமலு" பாக்ஸ் ஆபிஸ் வெற்றியாக மட்டுமல்லாமல், மலையாள சினிமாவின் ட்ரெண்ட்செட்டராகவும் மாறியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X