தலைவர் 171ல் ரஜினியின் ரோல் இதுதானா?.. மீண்டும் மீண்டும் ஒரே ஃபார்முலாவா லோகேஷ்?.. ரசிகர்கள் கேள்வி

சென்னை: ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. கண்டிப்பாக கமர்ஷியல் ப்ளஸ் சோஷியல் மெசேஜுடன் படம் உருவாகும் என்று ரஜினியின் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கிறார் ரஜினி. படத்தின் பெயர் ஏப்ரல் 22ஆம் தேதி அறிவிக்கப்படவிருக்கிறது.

ரஜினிகாந்த் கடைசியாக ஹீரோவாகஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர் நிவாரண மருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்வரை படம் உலகம் முழுவதும் வசூலித்தது. இதனால் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்த கலாநிதி மாறன் ரஜினிக்கு பிஎம்டபிள்யூ கார் ஒன்றை பரிசாக அளித்தார்.

Here are the details about Rajinikanth s Character in Thalaivar 171 Movie

வேட்டையன்: ஜெயிலர் படத்துக்கு பிறகு கெஸ்ட் ரோலில் நடித்த லால் சலாம் திரைப்படம் படுதோல்வியடைந்தது. தற்போது அவர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் ஞானவேல் இந்தப் படத்தில் ரஜினியை வைத்து எந்த மாதிரியான விஷயத்தை பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேசமயம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் டீசரை பார்க்கையில் ஒருவேளை படம் கமர்ஷியல் பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர். ஆனால் கண்டிப்பாக சோஷியல் மெசேஜ் இருக்கும் என்று எத்ர்பார்க்கப்படுகிறது.

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஃபகத் பாசில் ரஜினிக்கு மகனாகவும், ராணா டகுபதிதான் படத்துக்கு வில்லன் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட ஆவலோடு இருக்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள்.

தலைவர் 171: இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்தாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கிறார். இப்படி ரஜினிகாந்த் இப்போதும் படுபிஸியாக இருப்பதை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகும் ஆச்சரியம்தான் படுகிறது. கமல் ஹாசனுக்கு எப்படி ஒரு மெகா ஹிட்டை கொடுத்தோமோ அதேபோல் ரஜினிகாந்த்துக்கும் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் தனது டீமுடன் வேலையில் இறங்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

பெயர் எப்போது அறிவிப்பு?: படத்தின் பெயர் ஏப்ரல் 22ஆம் தேதி அறிவிக்கப்படும் என ஒரு போஸ்டரை வெளியிட்டு தெரிவித்திருந்தது படக்குழு. அந்தப் போஸ்டரில் ரஜினிகாந்த் கைகளில் கடிகாரங்களால் ஆன விலங்கு ஒன்று இருந்தது. அதனை வைத்து இந்தப் படம் டைம் ட்ராவல் ஜானரில் உருவாகிறதோ என்று ரசிகர்கள் கணிக்க ஆரம்பித்தனர். ஆனால் அப்படி எதுவும் இல்லை என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

என்ன கேரக்டர்?: இந்நிலையில் தலைவர் 171ல் ரஜினிகாந்த்தின் கேரக்டர் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் தீயாக பரவிவருகிறது. அதன்படி ரஜினிகாந்த் இப்படத்தில் நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரத்தில் தோன்றுவார் என்றும்; தங்கத்தை கடத்தும் கேங்ஸ்டர்தான் ரஜினிகாந்த் என்றும் சொல்லப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், இந்தப் படத்தையும் கேங்ஸ்டர் ஃபார்முலாவில் எடுக்கிறாரா லோகேஷ் கனகராஜ். மீண்டும் மீண்டும் அதே ஃபார்முலாவை தொடர்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். முன்னதாக, இந்தப் படம் 100 சதவீதம் தன்னுடைய ஸ்டைலில்தான் இருக்கும் என்று லோகேஷ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X