சூப்பர் ஸ்டார் மருமகன்னா சும்மாவா?.. சௌந்தர்யாவின் கணவர் சொத்து மதிப்பு.. யப்பா தலை சுத்துதே
சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பல வருடங்கள் அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். ஆனால் திடீரென்று இருவரது திருமண வாழ்க்கையும் பிரிவில் முடிந்தது. இருவரும் பிரிந்தாலும் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது மகள் சௌந்தர்யா விசாகனை திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் சௌந்தர்யாவின் கணவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
ரஜினிகாந்த்திற்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் சினிமாவில் ஈடுபடாமல் இருந்தார்கள். ஒருகட்டத்தில் மூத்த மகள் ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இளைய மகள் சௌந்தர்யா கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஐஸ்வர்யாவை தனுஷ் காதலித்து திருமணம் செய்துகொண்டார். சௌந்தர்யா அஷ்வின் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில காரணங்களால் அஷ்வின் சௌந்தர்யாவை பிரிந்தார்.

இரண்டாவது திருமணம்: இதனையடுத்து நடிகர் விசாகனை காதலித்த சௌந்தர்யா இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணத்தை முன்னின்று நடத்திவைத்த ரஜினிகாந்த்தை பலரும் பாராட்டினார்கள். குறிப்பாக ஒரு தந்தையாக ரஜினிகாந்த் தனது மகளுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டார் என்று அனைவருமே கூறினார்கள். தற்போது விசாகன் - சௌந்தர்யா திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது.
அடுத்த முயற்சி: சௌந்தர்யா இப்போது பொன்னியின் செல்வன் கதையை வெப் சீரிஸாக ரிலீஸ் செய்யும் முயற்சியில் இருக்கிறார். மேலும் ரஜினிகாந்த்தை வைத்து அவர் ஒரு படம் இயக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சொல்லப்படுகிறது. சௌந்தர்யாவுக்கும், விசாகனுக்கும் ஒரு மகன் இருக்கிறார். சமீபத்தில்கூட பள்ளிக்கு செல்ல மறுத்த சௌந்தர்யாவின் மகனை ரஜினிகாந்த் அழைத்து சென்று பள்ளியில் விட்ட வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. மேலும் அதுகுறித்து சௌந்தர்யா நெகிழ்ச்சியாகவும் போஸ்ட் ஒன்றை போட்டிருந்தார்.
தந்தைக்கு துணை: ரஜினியை பொறுத்தவரை அவர் மீது இரண்டு மகள்களுக்குமே பாசம் அதிகம். அதிலும் சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் திரை வாழ்க்கையில் பங்களிப்பதாக கூறப்படுகிறது. அதாவது பா.ரஞ்சித்துடன் படம் செய்தால் நன்றாக இருக்கும் என்று ரஜினிகாந்த்திடம் ரஞ்சித்தை கதை சொல்ல வைத்ததும் சௌந்தர்யாதான். அதன் காரணமாகத்தான் கபாலி, காலா ஆகிய படங்கள் ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் வெளியாகின. அந்தப் படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றன.
விசாகன் சொத்து மதிப்பு: இந்நிலையில் சௌந்தர்யாவின் கணவரான விசாகன் வணங்காமுடியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி விசாகனின் தந்தை Apex என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். அந்த நிறுவனத்தின் மூலம் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் வருவாய் வருகிறதாம். இது தவிர்த்து விசாகனுக்கு என்று மட்டும் தனியாக 500 கோடி ரூபாய்வரையில் சொத்து இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவல்தான் இணையத்தில் இப்போது தீயாக பரவிவருகிறது.


Click it and Unblock the Notifications











