சமுத்திரக்கனியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. இத்தனை கார்களா?.. ரசிகர்கள் உச்சக்கட்ட ஆச்சரியம்

சென்னை: இயக்குநராக தமிழ் சினிமாவில் நுழைந்து சில ஹிட் படங்களை கொடுத்துவிட்டு இப்போது நடிகராக கலக்கிக்கொண்டிருப்பவர் சமுத்திரக்கனி. அவர் நடித்த வடசென்னை, விசாரணை உள்ளிட்ட ஏராளமான படங்கள் ஹிட்டடித்திருக்கின்றன. விசாரணை படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்றிருக்கிறார் அவர். இந்தச் சூழலில் அவர் இன்று தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர்.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சமுத்திரக்கனி. பாலசந்தர் இயக்கிய நாடகங்களிலும் பணியாற்றிருக்கும் சமுத்திரக்கனி அதில் நடிக்கவும் செய்திருக்கிறார். தொடர்ந்து பாலசந்தருடன் பயணித்துவந்த அவர் விஜயகாந்த்தை வைத்து நெறஞ்ச மனசு என்ற படத்தை இயக்கினார். கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் நாடகங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இருப்பினும் சினிமா மீதான மோகம் விடாததால் நடிப்பிலும், இயக்கத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

Here are the details about Samuthirakani Net Worth

நடிகர் டூ இயக்குநர்: அதன்படி சசிக்குமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரத்தில் நடித்த சமுத்திரக்கனி அடுத்ததாக நாடோடிகள் படத்தை இயக்கினார். சசிக்குமார், விஜய் வசந்த், அனன்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நட்பை மையமாக வைத்து உருவான அந்தப் படம் மெகா ஹிட்டானது. அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தோடு போராளி, நிமிர்ந்து நில், அப்பா போன்ற படங்களை இயக்கினார். இவை அனைத்தும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிதாக போகவில்லை.

மீண்டும் நடிகர்: இந்தச் சூழலில் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் கனி. அதன்படி அவர் வேலையில்லா பட்டதாரி, சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து தான் ஒரு மிகச்சிறந்த நடிகன் என்பதை உணர்த்தினார். அதன் பிறகு நடிகராக அவரது கிராஃப் உச்சம் சென்றது. அந்தவகையில்,விசாரணை, ஆர்.ஆர்.ஆர், துணிவு, வாத்தி என பல படங்களில் நடித்தார். இதில் விசாரணை படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார்.

விநோதய சித்தம்: நடிப்பில் கவனம் செலுத்தினாலும் சமுத்திரக்கனிக்குள் இருக்கும் படைப்பாளி உறங்காததால் விநோதய சித்தம் படத்தை அவர் இயக்கினார். கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில் தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இறப்புக்கு பிறகு என்ன நிகழும் என்பதை தனக்கே உரிய பாணியில் சொல்லியிருந்ததால் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த ஜானரில் இதுவரை பெரும்பாலும் படங்கள் வராததால் இதனை ரசிகர்கள் ரசிக்கவே செய்தனர்.

தேசிய விருது: இதற்கிடையே விசாரணை படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் சமுத்திரக்கனி இன்று தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.

சொத்து மதிப்பு: இன்று சமுத்திரக்கனியின் பிறந்தநாள் என்பதால் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதன்படி ஒரு படத்துக்கு 25 லட்சம் ரூபாய்வரை சம்பளமாக பெறும் அவருக்கு மொத்தம் 20லிருந்து 25 கோடி ரூபாய்வரை சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவரிடம் ஸ்கார்பியோ, ஆடி ஏ 4, BMW X3 உள்ளன. அவரது வீட்டின் மதிப்பு மட்டுமே சில கோடிகள்வரை வரும் என்று திரைத்துறையினர் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X