SK 21 டைட்டில் இதுவா?.. அட கமல் பட பாட்டா இருக்கே.. சம்பவம் இருக்கு போல

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. பிரின்ஸ் படத்தின் தோல்வியால் ரொம்பவே துவண்டிருந்த சிவகார்த்திகேயன் மாவீரன், அயலான் என்று வரிசையாக இரண்டு ஹிட் படங்களை கொடுத்து மீண்டும் எழுந்துவிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21ஆவது படத்தில் நடித்துவருகிறார். கமல் ஹாசன் படத்தை தயாரித்துவருகிறார்

சின்னத்திரையில் நுழைந்து வெள்ளித்திரையில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். திறமையின் துணை கொண்டு அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்து அதில் கவனமாக செல்லும் சிவகார்த்திகேயன் தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை விஸ்தாரமாக்கும் நோக்கத்தில் அனூதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் வெளியானது.

 Here are the Details about SK 21 Movie Title

பிரின்ஸ்: ஆனால் அவரது எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கியது பிரின்ஸ் ரிசல்ட். படம் திரையிடப்பட்ட ஒரு வாரத்திலேயே திரையரங்குகளில் இருந்து படம் தூக்கப்பட்டது. இதனால் டாக்டர், டான் என வரிசையாக நூறு கோடி ரூபாய் வசூலித்த சிவகார்த்திகேயன் அதிர்ச்சியின் உச்சத்துக்கு சென்றார். முக்கியமாக அவரது ரசிகர்களையும் பலர் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

மாவீரன்: பிரின்ஸ் படத்தை தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்தார் சிவர்கார்த்திகேயன். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் போன படம் மிஸ் ஆனது போல் இந்தப் படம் மிஸ் ஆகாது என்று கூறியிருந்தார். மாவீரன் படத்தின் ரிசல்ட்டை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயன் சொன்னது மாதிரியே செய்துவிட்டார் என்று உற்சாகத்தின் உச்சத்துக்கு சென்றனர். அடுத்ததாக வெளியான அயலான் திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

ஓரங்கட்டிய அயலான்: முக்கியமாக தன்னை அறிமுகப்படுத்திய தனுஷுக்கு போட்டியாக பொங்கலில் களமிறங்கி வென்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். மாவீரன், அயலான் என்று தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட்டடித்திருப்பதால் எஸ்கேவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். முக்கியமாக இனி சிவகார்த்திகேயனுக்கு எந்தச் சறுக்கலும் இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.

பயோபிக்: அவர் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21ஆவது படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படமானது ராணுவ வீரர் ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சில காட்சிகளை ஷூட் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து படப்பிடிப்பு தளத்தில் யாரும் ஃபோன் யூஸ் செய்யக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

கடைசிக்கட்ட பணிகள்: ஒருவழியாக படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் இருக்கிறது. சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க; ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் தலைப்பு குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.அதன்படி படத்துக்கு போர்கண்ட சிங்கம் என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. போர்கண்ட சிங்கம் என்பது கமல் ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் வரும் பாடல் வரி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X