தலைவர் 171 படத்தின் பெயர் இதுவா?.. என்னய்யா புதுசு புதுசா கெளப்புறீங்க.. அந்தப் பட டைட்டிலா?

சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படம் குறித்து பலருக்கும் பலத்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஏனெனில் ஜெய்பீம் படத்தின் மூலம் அவர் இந்த சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தார். இப்போது அவர் ரஜினியை வைத்து படம் இயக்குவதால் கண்டிப்பாக தரமான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். இந்தப் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கிறார் ரஜினி.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. நெல்சன் திலீப் குமாருக்கும், ரஜினிகாந்த்துக்கும் அந்தப் படம் செம கம்பேக்காக அமைந்தது. ஏனெனில் ஜெயிலருக்கு முன்னதாக ரஜினி நடித்த அண்ணாத்த, தர்பார் படங்களும், நெல்சன் இயக்கியிருந்த பீஸ்ட் படமும் படுதோல்வியை சந்தித்தன. அதன் காரணமாக ஜெயிலர் படத்தின் வெற்றி இரண்டு பேருக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. சன் பிக்சச்ர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த அந்தப் படம் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

Here are the details about Thalaivar 171 Movie Name

வேட்டையன்: அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த். படத்துக்கு வேட்டையன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். படத்தி இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்துவருகிறது. கண்டிப்பாக பொழுதுபோக்கு அம்சத்துடன் சமூக அக்கறையுள்ள படமாக இது உருவாகும் என்று தெரிகிறது.

தலைவர் 171: சூழல் இப்படி இருக்க கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்கிறார் ரஜினிகாந்த். படத்துக்கு தற்காலிகமாக தலைவர் 171 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. கமல் ஹாசனுக்கு எப்படி விக்ரம் என்ற மெகா ஹிட் படத்தை லோகேஷ் கனகராஜ் கொடுத்தாரோ அதேபோல்தான் இந்தப் படத்தையும் மெகா ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் லோகி.

சமூக வலைதளங்களுக்கு நோ: இந்தப் படத்தின் கதையையும், திரைக்கதையையும் செம சூப்பராக எழுதுவதற்காக சமூக வலைதளங்களுக்கு தற்காலிகமாக பை சொல்லியிருக்கிறார். மேலும் அவரது கதை விவாதத்துக்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு வீட்டையும் ஆஃபிஸாக போட்டுக்கொடுத்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதில் ரஜினியின் கைகளில் தங்கத்தால் ஆன கடிகாரங்களால் விலங்கு சூழப்பட்டிருந்தது.

இதுதான் தலைப்பா?: அந்தப் போஸ்டரை பார்த்த பிறகு கதை குறித்து பல்வேறு யூகங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அதன்படி இதில் ரஜினிகாந்த் கேங்ஸ்டராக நடிக்கிறார் என்று ஒரு தகவலும் இல்லை இல்லை இந்தப் படம் டைம் லூப் கான்செப்ட்டில் உருவாகிறது என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் பெயர் குறித்து புதிய தகவல் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது படத்துக்கு கழுகு என்று பெயர் வைத்திருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ். கழுகு என்ற படம் ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கடந்த 1981ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X