புடிச்சாலும் புளியங்கொம்பை புடிச்சிருக்காரு.. வரலட்சுமியின் வருங்கால கணவர் சொத்து மதிப்பு இவ்வளவா?

சென்னை: நடிகர் சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர் வரலட்சுமி. கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் நிக்கோலாய் என்பவரை காதலித்துவந்தார். இருவருக்கும் ஜூலை இரண்டாம் தேதி தாய்லாந்தில் திருமணம் நடைபெறவிருக்கிறது. அதற்கான பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட்டின் சீனியர் நடிகர்களில் ஒருவரான சரத்குமாருக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். முதல் மனைவியை பிரிந்த அவர் அடுத்ததாக ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களில் முதல் மனைவிக்கு பிறந்தவர் வரலட்சுமி. வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு வந்த வரலட்சுமிக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருந்தாலும்; சரத்குமார் ஒத்துக்கொள்ளவில்லை. இதன் காரணமாக பாய்ஸ் உள்ளிட்ட பல படங்களை வரலட்சுமி தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Varalakshmi Nicholai

போடா போடி: ஒருவழியாக சரத்குமாரின் மனம் மாறியதை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடித்த போடா போடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் வரு. அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றாலும் வரலட்சுமியின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. நடிப்பு, நடனம் என அனைத்திலும் அந்தப் படத்தில் கலக்கினார். அதன் காரணமாக அடுத்தடுத்து சொல்லிக்கொள்ளும்படியான பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க ஆரம்பித்தன.

தாரை தப்பட்டை: அவரது கரியரில் முக்கியமான படங்களில் ஒன்று தாரை தப்பட்டை. இயக்குநர் பாலா இயக்கிய அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தாலும்; வரலட்சுமிக்குள் இருக்கும் மிகச்சிறந்த நடிகை அந்தப் படத்தில் வெளியே வந்தார். அந்தப் படத்துக்கு பிறகு கண்டிப்பாக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு; நினைத்தபடி சரளமாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் பட வாய்ப்புகள் கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் படங்கள் பெரிய ஹிட்டாகவில்லை.

காதல்: இதற்கிடையே நடிகர் விஷாலை வரலட்சுமி காதலித்துவந்ததாக கூறப்பட்டது. பிறகு நிக்கோலாய் என்பவரை காதலிக்க ஆரம்பித்தார். நிக்கோலாய் மும்பையில் ஆர்ட் கேலரி ஒன்றை வைத்திருக்கிறார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து நடந்துவிட்டது. மேலும் அவருக்கு டீன் ஏஜில் ஒரு மகளும் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க இவர்களது காதலுக்கு சரத்குமார் பச்சைக்கொடி காண்பிக்க திருமண வேலைகள் ஜரூராக நடக்க ஆரம்பித்திருக்கின்றன.

தாய்லாந்தில் திருமணம்: அதன்படி ஜூலை இரண்டாம் தேதி தாய்லாந்தில் இவர்களது திருமணம் பிரமாண்டமாக நடக்கிறது. வரவேற்பு சென்னையில் நடக்கும். இப்போது பத்திரிகை வைக்கும் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்கள் குடும்பத்தினர். சமீபத்தில்கூட நிக்கோலாயின் மகளுடன் வரலட்சுமி ஷாப்பிங் சென்றிருந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. அதனைப் பார்த்த ரசிகர்கள், 'தன் கணவரின் முதல் மனைவியின் மகளுடன் ஈகோ இல்லாமல் வரலட்சுமி பழகுவது சிறந்த பண்புகளில் ஒன்று' என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

சொத்து மதிப்பு: இந்நிலையில் வரலட்சுமியின் வருங்கால கணவர் நிக்கோலாயின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஆர்ட் கேலரி தொழில் மட்டும் இல்லாமல் வேறு சில தொழில்களையும் செய்துவருகிறாராம் நிக்கோலாய். அந்த தொழில்களில் வரும் வருமானத்தையும் சேர்த்து நிக்கோலாய்க்கு மொத்தம் 85 கோடி ரூபாய்வரையில் சொத்து மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X