GOAT இசை வெளியீட்டு விழா எப்போ தெரியுமா?.. ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் செய்தி

சென்னை: சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. இந்தச் சூழலில் GOAT படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான லியோ விமர்சன ரீதியாக அடிவாங்கியது. எனவே அதனை சரிசெய்யும் பொறுப்பில் இருக்கிறார் அவர். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் எப்படி விஜய் அவர் இயக்கத்தில் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டார் என்ற சந்தேகம் விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் கஸ்டடி ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி வெங்கட் பிரபு ஓகே வாங்கிவிட்டாராம்.

Here are the details about Vijay GOAT Movie Audio Launch Date

GOAT: படத்துக்கு GOAT (Greatest Of All Time)என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ எண்ட்ரி கொடுப்பதாலும், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது.

விறுவிறு ஷூட்டிங்: படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டு அங்கு ஒரு பாடல் காட்சியும் ஷூட் செய்யப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து, துருக்கி நாடுகளில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. அதனையடுத்து யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் சகோதரி பவதாரிணி உயிரிழந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கி நடந்துவருகிறது. ரஷ்யாவில் நடந்த அந்த ஷெட்யூல்தான் படத்தின் கடைசி ஷெட்யூல் என்று கூறப்பட்டது.

அமெரிக்கா பறந்த விஜய்: ஆனால் விஜய் இன்று அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார். அதற்கு அவர் ஏர்போர்ட்டுக்கு வந்தபோது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. எனவே இதுதான் கண்டிப்பாக இறுதிக்கட்ட ஷூட்டிங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் விஜய் ஷூட்டிங்கிற்காக சென்றிருக்கிறாரா இல்லை வேறு ஏதேனும் பணிக்காக சென்றிருக்கிறாரா என்றும் ரசிகர்கள் தங்களது கேள்வியை சமூக வலைதளங்களில் எழுப்பிவருகின்றனர்.

இசை வெளியீட்டு விழா: இந்நிலையில் GOAT படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இன்னும் சில மாதங்களில் மலேசியாவில் நடைபெறும் என்றும்; அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே படத்தின் இரண்டாவது சிங்கிள் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியிடப்படலாம் என்ற பேச்சும் ஒடிக்கொண்டிருப்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X