அய்யய்யோ மீண்டும் மீண்டுமா?.. ரஜினி மகளின் ஃபார்முலாவை கையில் எடுக்கும் விஜய் மகன்?
சென்னை: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். முதல் படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குகிறார். ஜேசன் இயக்குநராக அறிமுகமாகிறார் என்ற அறிவிப்பு வெளியானதோடு சரி; அதற்கு பிறகு அந்தப் படம் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேசமயம் ஹீரோவாக இவர் நடிக்கிறார் அவர் நடிக்கிறார் என தகவல்கள் மட்டும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் ஜேசன் சஞ்சய் இயக்கப்போகும் படத்தின் கதை இதுதான் என்ற புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
விஜய் ஃபேமஸான நடிகராக இருப்பதால் அவரது மகன் சஞ்சய்யும் நடிகராக வலம் வருவார் என பலரால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தனது தந்தை போல் நடிகராக இல்லாமல் தாத்தா போல் இயக்குநராக வேண்டும் என்று எப்போதோ முடிவெடுத்துவிட்டார். அதனையடுத்து கனடாவில் அவர் அதுதொடர்பாக படிக்கவும் செய்தார். படித்துக்கொண்டிருந்தபோதே சஞ்சய்; புல் தி ட்ரிக்கர் என்ற குறும்படத்தை இயக்கினார். அதில் அவரது மேக்கிங்கும், இயக்கமும் நன்றாகவே இருந்ததாக பேச்சு எழுந்தது. மேலும் அந்த குறும்படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பலரையும் ஈர்த்தது. எனவே விரைவில் இயக்குநராக அறிமுகமாகி விஜய்யை வைத்து படம் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கூற ஆரம்பித்தனர்.

லைகாவுடன் கூட்டணி: இந்தச் சூழலில் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிவிட்டார். லைகா நிறுவனம் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது. அதற்கான அக்ரீமெண்ட்டில் விஜய் மகன் சஞ்சய் கையெழுத்து போடும் புகைப்படங்கள் வெளியாகின. இதனையடுத்து சஞ்சய்யின் முதல் படத்தில் யார் ஹீரோ என்ற கேள்வியும் பலரிடம் பலமாக எழுந்திருக்கிறது.
விஜய்க்கு தெரியாது?: இதற்கிடையே சஞ்சய் இயக்குநர் ஆகப்போகிறார் என்ற அறிவிப்பு வரும்வரை அவர் செய்த மூவ்கள் பற்றி விஜய்க்கு தெரியாது என்று ஒரு தகவல் ஓடியது. மேலும் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டிருப்பதால் அவர் தனது மகன் மற்றும் மகளுடன் லண்டனுக்கு சென்றுவிட்டார். தமிழ்நாடு வந்து பல மாதங்கள் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதெல்லாம் வெறும் வதந்திதான் என விஜய் ரசிகர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே விஜய் அரசியல் கட்சி தொடங்கியது, GOAT படத்தின் ஷூட்டிங் என பிஸியாக இருக்கிறார்.
யார் ஹீரோ?: ஜேசன் சஞ்சய் படம் இயக்கப்போகிறார் என்று அறிவிப்பு வெளியானாலும் யார் அதில் ஹீரோவாக நடிப்பார் என்று தெரியாமல் இருக்கிறது. விஜய் சேதுபதி, விக்ரம் மகன் துருவ், கவின் உள்ளிட்டோரில் யாரேனும் ஒருவர் ஹீரோவாக நடிக்கலாம் என்று தகவல்கள் வெளியானாலும் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
புதிய தகவல்: இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கப்போகும் படத்தின் கதை இதுதான் என்று புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்துதான் ஜேசன் தனது முதல் திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் என கூறப்பட்டது. முன்னதாக அவர் தனது முதல் படமாக ஒரு காதல் கதையை எடுக்கவிருக்கிறார் என்று பேச்சு ஓடியது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள், தமிழ் சினிமாவில் கிரிக்கெட்டை மையமாக வைத்து ஏகப்பட்ட கதைகள் வெளியாகியிருக்கின்றன. சமீபத்தில்கூட ப்ளூ ஸ்டார், லால் சலாம் ஆகிய இரண்டு படங்கள் அந்த ஜானரில்தான் வந்தன. அவற்றில் ப்ளூ ஸ்டார் மட்டுமே ஹிட்டடித்தது. லால் சலாம் சொதப்பியது. சூழல் இப்படி இருக்க ஜேசன் சஞ்சய் கிரிக்கெட்டை மையமாக வைத்து படம் எடுத்தால் அது ஹிட்டாகும், வித்தியாசமாக ப்ரெசண்ட் செய்வாரா என்று கேள்வி எழுப்புகின்ற்னார். இவரும் ரஜினியின் மகள் ஃபார்முலாவை கையில் எடுத்திருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











