விஜயகாந்த் மகனுக்கு திருமணமா?.. எப்போது தெரியுமா?.. வெளியான லேட்டஸ்ட் தகவல்

சென்னை: விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த வருடம் டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் தள்ளியது. அவர் இருந்தவரை எத்தனையோ பேர் அவரால் பயன் அடைந்திருக்கின்றனர். சாமானியர்கள் முதல் பிரபலங்கள்வரை அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும். இந்தச் சூழலில் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனின் திருமணம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

விஜயகாந்த் இந்தப் பெயரை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. சினிமாவில் நுழைந்து தனக்கான தனித்த உடல் மொழி, ஸ்டைல், வசன உச்சரிப்பு, நடிப்பு என அனைத்திலும் முத்திரை பதித்தவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் பீக்கில் இருந்தபோது சினிமாவுக்குள் நுழைந்து தனக்கென தனி ரசிகர் படை சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியவர் விஜயகாந்த். அவ்வாறு அவர் செய்தது சாதாரண விஷயமில்லை என்பது பலரும் ஒத்துக்கொண்ட உண்மை.

Vijayakanth Son Vijaya Prabhakaran

கெத்து கேப்டன்: ரசிகர்களால் கேப்டன், புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். கேப்டன் என்ற பட்டத்துக்கு உரிய முறையில் பல விஷயங்களை தனியாளாக வழி நடத்தியவர் அவர். சிவாஜியின் இறப்பில் கூட்டத்தை ஒற்றை ஆளாக கட்டுப்படுத்தியது, ஏதேனும் பிரச்னை என்றால் எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் முதல் ஆளாக களத்தில் குதிப்பது, நட்சத்திர கலை விழாவை திறம்பட நடத்தி காண்பித்தது என அவர் உண்மையில் கேப்டன்தான் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறிவருகிறார்கள்.

உடல்நலக்குறைவு: சினிமாவில் கலக்கிவந்த விஜயகாந்த் அரசியலில் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். ஆனால் அரசியல் தளத்தில் அவருக்கு சில துரோகங்கள் நிகழ்த்தப்பட்டன. அது விஜயகாந்த்துக்கு ரொம்பவே மன உளைச்சலை கொடுத்தது. இதனையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி முழு ஓய்வு பெற்றார். பிறகு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த வருடம் உயிரிழந்தார்.

உதவி: விஜயகாந்த் பலருக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். அவரிடம் உதவி பெற்றவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். அந்த லிஸ்ட்டில் இப்போது டாப் ஹீரோக்களாக இருக்கும் விஜய், சூர்யாகூட இருக்கிறார்கள். இவர்கள் தவிர்த்து ஏராளமான செலிபிரிட்டிகளும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஓடி ஓடி உதவி செய்தார் விஜயகாந்த்.

திருமணம்: இதற்கிடையே விஜயகாந்த்தின் மகன்களில் ஒருவரான விஜய பிரபாகரனுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமணம் நடக்கவில்லை. விஜயகாந்த்தின் உடல்நிலை தொடர்ந்து மோசமானதால்தான் அவரது திருமணம் நடக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்தச் சூழலில் விஜய பிரபாகரன் திருமணம் எப்போது நடக்கும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் முடிந்த பிறகு பிரபாகரனின் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X