விஷாலின் ரத்னம்.. மூன்றாவது நாள் வசூல் இவ்வளவுதானா?.. மார்க் ஆண்டனி வைப் கிடைக்காதோ

சென்னை: நடிகர் விஷால் இப்போது ரத்னம் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஏற்கனவே மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய ஹிட்டடித்திருந்ததால் கண்டிப்பாக இந்தப் படமும் ஹிட்டடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களையே கொடுத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் படத்தின் மூன்றாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

விஷால் கடைசியாக மார்க் ஆண்டனி படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்தது. அவரது கரியரிலேயே ஒரு படம் 100 கோடி ரூபாய் வசூலித்தது என்றால் அது மார்க் ஆண்டனி திரைப்படம்தான். இதனால் விஷால் உற்சாகத்தோடு இருக்கிறார். அதே உற்சாகத்தோடு ஹரி இயக்கத்தில் இப்போது ரத்னம் படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே இருவரும் இணைந்த தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. எனவே இந்தப் படமும் ஹிட்டாகும் என்று விஷால் ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

Here are the details about Vishals Ratnam Movie 3rd Day Box Office Reports

ரத்னம் விஷால்: இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து விஷால் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். அந்த சூட்டோடு ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் இவர் நடித்திருந்த தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றவை. எனவே மார்க் ஆண்டனி கொடுத்த ஹிட் வைபை இந்தப் படத்திலும் விஷால் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பாசிட்டிவ் ரிசல்ட்: அந்த எதிர்பார்ப்போடு சில நாட்களுக்கு முன்பு ரத்னம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. விஷால் ரசிகர்களும், ஹரியின் ரசிகர்களும் ஆர்வத்துடன் படம் பார்க்க சென்றனர். படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துவருகின்றனர். அதிலும் படத்தின் மேக்கிங்கிலும், திரைக்கதையிலும் ஹரி பட்டையை கிளப்பிவிட்டார் என்று கூறும் ரசிகர்கள்; நிச்சயம் இந்தப் படம் ஹிட் லிஸ்ட்டில் இடம்பெற்றுவிடும் என்று கூறிவருகின்றார்கள்.

பஞ்சாயத்து: இதற்கிடையே படத்துக்கு ஓரளவு பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்தாலும் இடையில் சில பஞ்சாயத்துக்களும் ஓடின. அதாவது படத்தின் ரிலீஸுக்கு முன்னதாகவே கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக விஷால் கூறியிருந்தார். அதேபோல் திருப்பூர் சக்தி சினிமாஸில் திடீரென ரத்னம் படத்தின் காட்சி நிறுத்தப்பட்டது. இதனால் விஷால் ரொம்பவே அப்செட்டானார். அதேசமயம் இந்தப் படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்று அவர் உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கிறார். அதேபோல் சம்பளத்தையும் உயர்த்திவிட்டதாக கூறப்பட்டது.

பாக்ஸ் ஆபிஸ்: இந்நிலையில் படம் வெளியாகி மூன்று நாட்கள் நிறைவடைந்திருக்கும் சூழலில் ரத்னம் படத்தின் வசூல் நிலவரம் தெரியவந்திருக்கிறது. அதன்படி முதல் நாள் அந்தப் படம் 2 கோடியே 50 லட்சம் ரூபாயும், இரண்டாவது நாளில் இரண்டு கோடியே 70 லட்சம் ரூபாய் வசூலித்ததாகவும் கூறப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கண்டிப்பாக இந்தப் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக நேற்று படமானது இரண்டு கோடியே 15 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. ஆக மொத்தம் மூன்று நாட்களில் படமானது கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், மார்க் ஆண்டனி 100 கோடி ரூபாய் வசூலித்தது. போகிற போக்கை பார்த்தால் ரத்னம் திரைப்படம் 50 கோடி ரூபாயை கூட எட்டாதோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X