பிரியங்கா Vs மணிமேகலை.. இருவரும் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. யப்பா ஒரு எபிசோடுக்கு இவ்வளவா?

சென்னை: சின்னத்திரையில் ஃபேமஸான தொகுப்பாளினிகளாக வலம் வருபவர்கள் பிரியங்காவும், மணிமேகலையும். சில நாட்களாக இருவருக்கும் முட்டிக்கொண்டிருக்கிறது. பிரியங்கா பற்றி மணிமேகலை வெளியிட்ட ஒரு வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்தும் மணிமேகலை வெளியேறிவிட்டார். சூழல் இப்படி இருக்க இரண்டு பேரும் ஒரு எபிசோடை தொகுத்து வழங்குவதற்காக வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.

வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் தனது திறமையை நிரூபித்தால் தமிழ்நாட்டு மக்களின் மனதில் இடம்பிடிக்கலாம் என்பதற்கு ஏகப்பட்ட பேர் உதாரணமாக இருக்கிறார்கள். தான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளை வைத்து மக்கள் மனதில் பெப்சி உமா, சிவகார்த்திகேயன், கோபிநாத் என பலர் இடம்பெற்றிருக்கிறார்கள். சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை இப்போது ஒட்டுமொத்த தமிழ்நாடும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. கோலிவுட்டின் மிகப்பெரிய ஹீரோக்களில் ஒருவராக மாறியிருக்கிறார் அவர்.

priyanka manimegalai

பிரியங்கா: அப்படி சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஃபேமஸ் ஆனவர்களில் ஒருவர் பிரியங்கா. விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளர்களில் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கும் அவர் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை ஆங்கரிங் செய்திருக்கிறார். தனது கலகலப்பான பேச்சு, கவுண்ட்டர்கள் என தனது திறமையை கொண்டு தனக்கென தனி இடத்தை சின்னத்திரையில் பிடித்திருக்கிறார் அவர். அவர் ஆங்கரிங் செய்யும்போது ஆங்காங்கே டிடியின் ஸ்டைல் எட்டிப்பார்ப்பதாக குரல்கள் எழுந்தாலும்; அவருக்கென்று ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பிக்பாஸ்: ஆங்கரிங் மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் அவர். அந்த நிகழ்ச்சியில் அவரால் நிலைத்து ஆட முடியவில்லை. வீட்டுக்குள் இருக்கும்போது அவருக்கும், நிரூப்புக்கும் இடையே நடந்த வாக்குவாதம் ஒன்று அப்போது மட்டுமின்றி இப்போதும் ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே எவிக்ட் செய்யப்பட்ட அவர்; அங்கிருந்து வெளியே வந்ததும் வழக்கமான தனது ஆங்கரிங் பணியை தொடர்ந்துவருகிறார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் போட்டிப்போட்டுவருகிறார் அவர். ஆனால் அங்குதான் அவருக்கு பிரச்னை ஆரம்பித்தது.

பிரியங்கா Vs மணிமேகலை: அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை மணிமேகலை தொகுத்து வழங்கினார். இவரும் பல வருடங்களாக ஆங்கரிங் செய்துவருபவர். மேலும் அந்த நிகழ்ச்சியின் முந்தையை சீசனில் கோமாளியாகவும் கலந்துகொண்டவர். சூழல் இப்படி இருக்க இப்போது தான் தொகுத்து வழங்கும்போது பிரியங்கா ஓவராக தலையிடுகிறார் என்றும்; தனக்கு சுயமரியாதை ரொம்பவே முக்கியம் என்று சொல்லி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டார். அதுமட்டுமின்றி என்ன நடந்தது என்பது தொடர்பாக நீண்ட விளக்கத்துடன் கூடிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

பேசுபொருள்: கடந்த சில நாட்களாகவே சின்னத்திரை வட்டாரத்தில் இந்த விஷயம்தான் பேசுபொருளானது. ஒருதரப்பினர் மணிமேகலைக்கும், ஒருதரப்பினர் பிரியங்காவுக்கும் சப்போர்ட் செய்துவருகின்றனர். அதேசமயம் பிரியங்கா இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக வாய் ஏதும் திறக்காமல் மௌனமே காத்துவருகிறார். ஆனால் பிரியங்கா அப்படி இருக்கக்கூடாது; தனது தரப்பு விளக்கத்தை தெரிவித்து இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழ ஆரம்பித்திருக்கின்றன.

சம்பளம்: இந்நிலையில் பிரியங்காவும், மணிமேகலையும் ஆங்கரிங்கிற்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பிரியங்கா ஒரு எபிசோடை தொகுத்து வழங்க கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் ரூபாய்வரை சம்பளமாக வாங்குகிறாராம். அதேபோல் மணிமேகலை ஒரு எபிசோடுக்கு 60,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய்வரை சம்பளமாக பெறுகிறார் என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X